பலா பட்டறை: உயிர் சங்கிலி..

உயிர் சங்கிலி..பிறப்பும் இறப்புமான
சங்கிலித்தொடர்களில்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமான
வளையங்களின் அழுத்தங்களில்
தேய்மானங்களை பற்றி
கவலைபடாமல்
உயிரின் சுழற்சி
இலக்கில்லாமல் ஆடிக்கொண்டேதான்
இருக்கிறது
ஒரு முனையும், மறு முனையும்
ஒன்றேதான் என்றபோதும்
விலகியுள்ள வளையங்களின் உராய்வுகள்
பிழம்புகளை கக்கி
உன் வளையம் என் வளையம்
என உடைக்கத்திமிறும் 
நர மிருகங்களின் ஓலங்கள்
உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது..

17 comments: