பள்ளியில் படிக்கும்போது பாட புத்தகத்தின் முதலிலேயே தீண்டாமை தவறென்ற வார்த்தைகள் இப்போது சற்று மாறி..
தீண்டாமை ஒரு பாவச்செயல்
தீண்டாமை ஒரு பெருங்குற்றம்
தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல்
என்று இருக்கிறது. தீண்டாமை என்பது எப்போதும் ஏதாவது ரூபத்தில் மனிதனை பீடித்துக்கொன்டே இருக்கும் போல. ஜாதி முறை தீண்டாமை போய் இப்போது பொது முறை தீண்டாமை வந்துவிட்டது. இங்கே ஜாதிகள் பொருட்டல்ல, தீண்டாமை எதிர்த்தவர்களும் இந்த நவீன தீண்டாமையை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.
சரி விஷயத்துக்கு வருவோம்..
சமீபத்திய பன்றிக்காய்ச்சலும் (*H1N1*) இதற்கு முன் வந்த சார்ஸ் போன்ற வகையறாக்களும். மனிதனை மனிதன் தீண்டாமலிருக்க மனிதர்களை கொண்டே பாடம் எடுக்க வைக்கிறது.
சுத்தத்தின் தன்மையை நோய் வந்து உணர்த்தி தொலைக்க வேண்டிய கட்டாயம். நோய் வந்தவன் மூட வேண்டுமா அல்லது வராதவன் மூடவேண்டுமா என்று தெரியாமல் சகட்டுமேனிக்கு முகமூடி அணிந்தவர்கள் கூட்டத்தில் பயமுறுத்துகிறார்கள். நோயுற்றவர்கள் இடம் கூட சுத்தமாய் கழுவி துடைக்கப்படுகிறது.
எந்தக் கடவுளும் மதமும் காப்பாற்றாத இந்த வைரஸ்கள் தனி மனித தூய்மைக்கான, ஒழுக்கத்திற்கான தூதர்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
2 comments:
வாழ்த்துகள் நண்பரே அப்படியே எல்லாம் உண்மை
நன்றி தியா.. நான் தயக்கத்துடனே இட்ட பதிவு இது, உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி.
Post a Comment