பலா பட்டறை: இஸ்த்துகினு கிடக்குது பெரிசு

இஸ்த்துகினு கிடக்குது பெரிசு

நெஞ்சு குழி ஏறி எறங்கி
வாய நல்ல போலந்துக்கினு

இன்னாதான் கூவினாலும்
ரவ கூட அசையாம

பெரியாஸ்பத்திரிக்கி இட்டுகினு
நேத்து போய் பாக்க சொல்ல
நர்சம்மா சொல்லிச்சு
இது இந்த
ராவு தாங்காது...

உனுக்கி இன்னா தெரியும்
வைரம் பாஞ்ச கட்ட இது
போகல கூட போடாத
சொக்க தங்க உடம்பு இது

எங்க பெரிசு என்னிக்கும்
எங்கள உட்டுட்டு போவாது

சுர்ருன்னு வந்த கோவத்துல
சர்ருன்னு வந்தோம் பேட்டைக்கு,,

முனீஸ்வரன் கோயிலு துண்ணூறு
பூசி உட்டான் கொமாரு

ராவெல்லாம் கண்முழிச்சு
பெரிசு கத பேசினோம்

அடிச்ச சரக்கு வேல செய்ய
அப்படியே தூங்கிட்டோம்

பொழுது விடிஞ்சி பாக்க சொல்ல
சாவுமோளம் கேட்டுச்சு

இஸ்த்துகினு இருந்த பெரிசுகூட
எழுந்து உக்காந்து அழுவுது

விஷ சாராய சாவா ன்னு
யாரோ சொல்றது கேக்குது...

பெரிசுக்கு வெச்ச மாலைய
பெரிசே எங்களுக்கு போடுது...


23 comments: