பலா பட்டறை: வேண்டுமெனில் இழக்கத்தான் வேண்டும்..

வேண்டுமெனில் இழக்கத்தான் வேண்டும்..

மகிழ்ச்சி வேண்டுமா,
துக்கத்தை இழந்துவிட்டு வாருங்கள்..

மனைவி வேண்டுமா
தனிமையை இழந்துவிட்டு வாருங்கள்

தனிமை வேண்டுமா
காதலியை இழந்துவிட்டு வாருங்கள்..

காதலி வேண்டுமா
உங்களை இழந்துவிட்டு வாருங்கள்

நீங்கள் வேண்டுமா
சுயம் இழந்துவிட்டு வாருங்கள்

இயற்கை வேண்டுமா
செயற்கை இழந்துவிட்டு வாருங்கள்

பணம் வேண்டுமா
சுதந்திரத்தை இழந்துவிட்டு வாருங்கள்

குழந்தைகள் வேண்டுமா
கோபத்தை இழந்துவிட்டு வாருங்கள்

கோபம் வேண்டுமா
குணத்தை இழந்துவிட்டு வாருங்கள்

படிப்பு வேண்டுமா
மறதியை இழந்துவிட்டு வாருங்கள்

போதை வேண்டுமா
நிதானம் இழந்துவிட்டு வாருங்கள்

சொர்க்கம் வேண்டுமா
உயிர் இழந்துவிட்டு வாருங்கள்

நரகம் வேண்டுமா
எதுவுமே இழக்காதீர்கள்..  

ஒன்று வேண்டுமா
ஒன்றை இழந்துவிட்டு வாழு(ரு)ங்கள்.
  

1 comments:

ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி said...

ஒன்றை இழந்தால் தான் இன்னொன்றை
பெற முடியும் என்பது நியதி. ஆனால் இழந்ததின் வலி (அ) தாக்கம், பெறப்படுவதின்
சுகத்தினை விட கூடுதலாக இருக்கிறதே!
என்ன செய்வது?