பலா பட்டறை: பறவை சுதந்திரம்

பறவை சுதந்திரம்
சர்ப்பம் விழுங்கிய
இரை போல
நீள சாலைகளில்
பயணம்..

பிரிவுகளின்
முக்கோணத்தில்
முடிவுகளின் ஆரம்பம்

எல்லா பாதைகளும்
ஒன்றின் மேலேயே
என்றாலும்..

கூடாரம் போட்ட
வாழ்க்கை
எனை
சிறிய வட்டங்களில்
சிறை வைத்து
விடுகிறது..

வாழ்க்கை எனும்
சிலந்திக்கூடு
மொத்தமாய் பயணம்
செய்து முழுவதும்
காண தடுக்கிறது

ஆயிரமாயிரம் மைல்கள்
கடந்து
வாரிசு காக்க வந்த
நாரை கூட்டம்

மறுமைக்கான
ஆசையை கிளறிவிட்டது
ஒற்றை சிறகை
பறக்க விட்டு..

15 comments: