பலா பட்டறை: ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு

ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு









ஒரு ஊர்ல வீணாப்போன பெரிசு ஒன்னு பக்கத்து ஊட்ல இருந்தவரை திருடன்னு இல்லாததும் பொல்லாததுமா சொல்லி எல்லாரையும் நம்ப வச்சுது. போலிசும் அவர கைது பண்ணி ஜெயில்ல போட்டாங்க, கொஞ்ச நாளுக்கப்புறம் அவர் திருடனில்லன்ற உண்மை தெரிஞ்சு அவர வெளில விட்டாங்க.. வெளில வந்த அந்த பக்கத்து வீட்டு இளைஞர் தன்னோட பேர கேடுத்ததுக்காக  அந்த பெரிசு மேல கேச போட்டாரு.


பெரிசும் தில்லா கோர்ட்டுக்கு போய் அதெல்லாம் சும்மா விளையாட்டுக்கு சொன்ன கமென்ட், பெரிசா எடுத்துக்காதீங்க ஜட்ஜையா ன்னு சொல்லிச்சு...


ஜட்ஜையா கொஞ்ச நேரம் தீர்ப்பு கொடுக்கறதுக்கு முன்னாடி யோசிச்சாரு... சரின்னு பெரிச கூப்டாறு ஐயா பெரிசு இப்போ நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒரு பேப்பர்ல எழுதுங்க, எழுதினப்புறம் அந்த பேப்பர  துண்டு துண்டா கிழிச்சி கொஞ்ச கொஞ்சமா வீட்டுக்கு போகும்போது போட்டுகிட்டே போங்க...  நாளைக்கு வாங்க கேசுக்கு தீர்ப்பு சொல்றேன்ன்னாறு.


மறுநாள் எல்லாரும் கோர்ட்டுக்கு வந்தாங்க நீதிபதி பெரிச கூப்பிட்டு, நீங்க வெளில போய் நேத்து தூக்கி போட்ட எல்லா பேப்பர் துண்டுகளையும் எடுத்துகிட்டு வாங்கன்னார்.


பெரிசு ரொம்ப  கூலா சாரி ஜட்ஜையா அந்த காகிதமெல்லாம் எங்க பறந்து போயிருக்குமோ தெரியாது அத தேடி கண்டு பிடிக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னாரு. 


உடனே நீதிபதி குறுக்கிட்டு அதே மாதிரிதான் வார்த்தைகளும் ஒரு முறை வெளில விட்டா அது ஊர் பூரா பரவிடும் திரும்ப 
சரி பண்றது கஷ்ட்டம்.. உங்களால ஒழுங்கா பேச முடியாதுன்னா நீங்க பேசாம இருக்கறதே நல்லதுன்னாரு.  


நீதி: நாம் நம் வாய்க்கு எஜமானாக இருந்தால்..வார்த்தைகளுக்கு அடிமையாக இருக்க வேண்டியதில்லை..








1 comments:

Vidhoosh said...

ஹும்ம்ம். படம். படத்துக்கேத்த கதை. நல்லாருக்குங்க.

--வித்யா