ஒரு நிர்வாகியின் சோக முடிவு ??
நார்ப்பத்திறேன்டே வயதான ராஜன் தாஸ் SAP CEO அவர்களின் திடீர் சோக மரணம் பற்றி சில மாதங்களுக்கு முன்பு சிலர் படித்திருக்கலாம். இந்தியாவின் MNC Company களில் மிகவும் இள வயது முதன்மை அதிகாரி 21 அக்டோபர் அன்று உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சி முடித்து வீட்டுக்கு வந்தவர் தடுமாறி விழுந்தார் இறந்தார் - காரணம் மாரடைப்பு Massive Heart Attack. அவருக்கு மனைவியும் இரண்டு சிறிய குழந்தைகளும் உள்ளனர்.
இந்திய corporate உலகத்தையே அதிர்ச்சியாக்கிய தினமும் உடற்பயிற்சி செய்யும், நீண்ட தூர மாரத்தான் ஓட்ட விரும்பியுமான இந்த ராஜன் தாஸ் அகால மரணம் ஏன் ஏற்பட்டது. உடற்பயிற்சி மற்றும் ஓட்டப்பயிற்சி இதயத்துக்கு நல்லது தானே செய்யும் என்ற கேள்வி எழுகிறதல்லவா??
இது stress எனப்படும் மன அழுத்தத்தால் ஏற்படுகிறதா? என்று அறாய்ந்தால், இன்றைய பரபரப்பு மிகுந்த வேக வாழ்க்கையில் எல்லோருக்கும்தான் இந்த மன அழுத்தம் ஏற்படுகிறது. மேலும் அவரே கூட ஒரு பேட்டியில் வேலை பளு காரணமாக தனக்கு அதிக மன அழுத்தம் உண்டு என்றும் குறிப்பிட்டிருந்தார். அனால் அது மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாத நிலை, இன்று அது எல்லோருக்கும் இருக்கும் ஒரு சாதாரண ப்ரச்சனையாகிவிட்டதுதான்.
அனால் இந்த இறப்புக்கு முக்கிய காரணமாக ஒன்றை குறிப்பிடுகிறார்கள்::
NDTV தொலைக்கட்சிக்கு ராஜன் அளித்த ஒரு பேட்டியின் போது தான் ஒரு நாளைக்கு 4 லிருந்து 5 மணி நேரம் மட்டுமே தூங்குவதாக குறிப்பிட்டிருந்தார். மேலும் தான் அதிக நேரம் தூங்குவதற்கு விரும்புவதாகவும் அதில் தெரிவித்திருந்தார் பேட்டி லிங்க்
இதனை பற்றி இருதய நிபுணர்களின் கருத்துகள் என்னவென்றால்::
இதய நோய்கள் அதிகரிப்புக்கு தூக்கமின்மையும் ஒரு மிக முக்கிய காரணியாக சொல்கிறார்கள்.
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்குபவர்களை விட - 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்குபவர்கள் ரத்த அழுத்தம் 350% முதல் 500% வரை அதிகரிப்பதாக அராய்ந்திருக்கிரார்கள். அதிக ரத்த அழுத்தம் இதயத்துக்கு மிகவும் ஆபத்தானது.
இள வயது நபர்கள் (25-49 years of age) 5 மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினால் 3 மடங்கு இந்த ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள்.
முழு தூக்கமின்மை அல்லது குறைவான நேர தூக்கம் ரத்தத்தின் அடர்த்தியை அதிகரித்து (High sensitivity C-Reactive Protein (hs-cRP) ) இருதய நோய்களுக்கு/மாரடைப்புகளுக்கு வழிவகை செய்கின்றன. பிறிதொரு பொழுதில் நீங்கள் தூங்கி சரி கட்டி விட நினைத்தாலும் இந்த அதிக அளவு அடர்த்தி குறைவதில்லை என்பது அதிர்ச்சியான ஒரு விஷயம்.
ஒரே ஒரு இரவு தூக்கம் போனால் மிக அதிக அளவு Interleukin-6 (IL-6) Tumour Necrosis Factor-Alpha (TNF-alpha) and C-reactive protein (cRP) எனப்படும் ஒரு விஷ அளவுகள் ரத்தத்தில் அதிகரிக்கிறது. கான்செர், மூட்டுவலி, இதய நோய்களுக்கு இவை முக்கிய காரணிகள்.
தூக்கம் இரண்டு வகையாக பிரிக்கப்பட்டிருக்கிறது REM (RAPID EYE MOVEMENT) மற்றும் non-REM இந்த இரண்டு வகை தூக்கங்களும் மிக முக்கியம். முதல் வகை மனதிற்கு அமைதியை தரும் பின்னது உடலுக்கு அமைதியை தரும். இரவு தூக்கத்தில் நம் உடல் சுமார் 4-5 முறை இந்த இரண்டு வகை தூக்கத்திற்கும் மாறி மாறி செயல்படுகிறது.
தூக்கத்தின் முதல் பகுதி பெரும்பாலும் non-REM வகையாகவே இருக்கிறது, இந்த நேரத்தில் உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்களை pituitary gland விடுவித்து உடலை சுத்தம் செய்கிறது. பின் பகுதி தூக்கம் பெரும்பாலும் REM வகை.
மனதளவில் உடல் நாள் முழுவதும் உற்சாகமாகவும் விழிப்புடவும் இருக்க பின் பகுதி தூக்கம் மிகவும் முக்கியம், விடி காலையில் அலாரம் வைத்து எழும்போது நாம் நாள் முழுவதும் மிகவும் எரிச்சலடைவது போல உணர்வது REM தூக்கம் கம்மியாவதால்தான். 5 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தின் போது நாள் முழுவதும் சோர்வு, உடல் தளர்ச்சி போன்றவை non-REM தூக்கத்தின் குறைபாடுதான். உடல் எதிர்ப்பு சக்தியும் குறைய இது மிக முக்கிய காரணி.
சரி இனி மறைந்த ராஜன் அவர்கள் விஷயத்துக்கு வருவோம் , நல்ல உடற்பயிற்சி, நல்ல சாப்பாடு, நல்ல வாழ்க்கை முறை, மாரத்தான் ஓட்டம், உடலை கட்டுப்பாடாக வைத்துக்கொள்வது போன்ற எல்லா நல்ல பழக்கங்களும் இருந்தும் குறைந்த தூக்கத்தினால் மரணத்தை சந்தித்தார். CORPORATE உலகமும் ஒரு நல்ல நிர்வாகியை இழந்தது. இரண்டு குழந்தைகள் நல்ல தகப்பனை இழந்தன. 7 மணி நேர தூக்கம் இல்லாததால் வந்த வினை இது.
அறிவியலும் இதனை உறுதி படுத்தி இருக்கிறது. இது மட்டுமே காரணமல்ல அனால் இது மிக முக்கிய காரணம்.
எல்லாவற்றையும் தூக்கிப்போட்டு தூங்குங்கள் என்று சொல்லவதில்லை இந்த பதிவின் நோக்கம். தூங்க வேண்டிய நேரத்தில் நிம்மதியாய் தூங்கினால் ஒரேயடியாய் தூங்காமல் காலை கண் முழிப்போம் என்று சொல்லவே..
பின்குறிப்பு::
ஒரு நண்பர் எனக்கு ஆங்கிலத்தில் அனுப்பிய மின் அஞ்சலின் தமிழ் பதிப்பு இது. வலையுலக நண்பர்களுக்காக.
2 comments:
வேலை அப்படி. அத்தோடு அவரது ஈடுபாடு. அதுவே தொல்லையாக முடிந்துவிட்டது.
நானும் எவ்வளவோ முயற்சி செய்கிறேன். என் தூக்கம் 8 மணி நேரத்தற்குக் குறையமாட்டேன் என்கிறது.
நன்றி. நான்கூட நிறைய தூங்க வேண்டி இருக்கிறது. இந்த கட்டுரையை மனதில் வைத்து இருக்கிறேன்.
Post a Comment