பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..
பகலிலேயே
கடத்துகிறாய்
பார்வையால்
போதையை
கண்டுபிடிக்கத்தான்
யாருமில்லை..

----------------------------------------------------------------------------------

கவலை மறக்க
கள் குடித்த 
மனது 
அதை மறைக்க 
கவலை குடித்தது  

 ----------------------------------------------------------------------------------

காக்கை குருவி 
எங்கள் ஜாதி 
பசித்தால் 
களவு செய் 
என்பதே நீதி... 

----------------------------------------------------------------------------------

குற்றமுண்டு 
குறைகளுண்டு 
ஏதுமறியா நடத்தையுண்டு 
ஆயினும் மனவண்டு 
சுற்றியே வருகுது 
உனைக்கண்டு.. 

----------------------------------------------------------------------------------

தினசரிகளாய்
வாழ்க்கை
வாசனையாய்
திறந்து, அவசரமாய் படித்து 
கடைசி பக்கம் முடிந்ததும் 
எங்கெங்கோ சிக்கி 
மறு சுழற்ச்சியில் 
மீண்டும்
வாசனையாய் பிறந்து...

----------------------------------------------------------------------------------

உன் விழிகொண்டு நீ 
எரிக்கும் பார்வையில் 
நீ உண்டு நானில்லை...

----------------------------------------------------------------------------------

உறைந்திருக்கும் 
நீர்படிமங்களின் இளகிய 
மனது கங்கையாய்
வந்தது பாவ ஜீவன்களை 
காக்க...

----------------------------------------------------------------------------------

தேசத்தந்தையை 
போலி என்றவனை
நல்லவனாக்கி 
உண்மை என்றவனை  
கெட்டவனாகும் 
விசித்திர ரூபாய்கள்  

----------------------------------------------------------------------------------

நண்பனோ 
எதிரியோ 
உயிரின்
உபத்திரவங்கள் 
ஏதும் செய்யாத    
சவங்கள்
எப்போதும் 
சாதுவாய் 
எனக்குத்தோன்றும்..

22 comments: