பலா பட்டறை: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

கமல் வாழும் நாஸ்ற்றோடாமஸ்???







சிவப்பு ரோஜாக்கள் 1978 - இல் வெளிவந்தது. ஒரு சைக்கோ கொலையாளியாக கமல் அதில் நடித்திருப்பார். அப்படம் வெளிவந்த சில வருடங்களுக்கு பிறகு சைக்கோ ராமன் என்ற பெண்களை கொள்ளும் கொடுர சைக்கோ கொலையாளி போலீசிடம் பிடிபட்டான்.




சத்யா 1988 வேலை இல்லாத இளைஞனாக கமல் நடித்திருப்பார்..1989 - 90 களில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக நம் நாடு பெரும் பிரச்சனைகளை சந்தித்தது.




தேவர் மகன் 1992 இல் வெளிவந்து சக்கை போடு போட்டது, கிராம சப்ஜெக்ட் -சில ஜாதி சண்டை காட்சிகள் இடம் பெற்ற படம் ஒரு வருடம் கழித்து 1993 களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜாதி சண்டைகள் நடைபெற்றன.








1996 தமிழகத்தின் பெரும்பாலான பைனான்ஸ் நிறுவனங்கள் மக்கள் தலையில் துண்டை போட்டு ஓடிப்போயின... அண்ணன் உலக நாயகன் 1994 லிலேயே மகாநதி என்ற படத்தின் மூலம் நமக்கு கோடி காட்டி இருக்கிறார் (சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே)






வருடம் 2000 ஹே ராம் படத்தில் ஹிந்து முஸ்லிம் வன்முறை கட்சிகள் இடம் பெற்ற படம்...2002 இல் குஜராத் கலவரம்.
.





2003 அன்பே சிவம் அதில் சுனாமி என்ற வார்த்தை கமல் உபயோகப்படுத்தி இருப்பார் நிறைய பேருக்கு அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது (சன் டிவி கடல் நீர் உள்ளே புகுந்ததுன்னுதான் சிவப்பு நிறத்தில் பிளாஷ் நியூஸ் போட்டது) . சரியாக 2004 லில் சுனாமி நம்மை தாக்கி கடலோரங்களை காலி பண்ணியது பல உயிர்களை பலி வாங்கியது.



6 comments:

Samuel | சாமுவேல் said...

சுனாமி மட்டும், ஒத்து கொள்ள முடியும்.....மற்ற விஷயங்கள் ஏனோ சரியா பொருந்த வில்லை.

Samuel | சாமுவேல் said...

//சில வருடங்களுக்கு பிறகு சைக்கோ ராமன் என்ற பெண்களை கொள்ளும் கொடுர சைக்கோ கொலையாளி போலீசிடம் பிடிபட்டான்.//
சைகோ ராமன், கேள்வி பட்டதில்லை...ஆனால் அதற்கு முன்பும் நாம கேள்வி படாத சைகொகள் பலர் இருந்திருப்பார்கள்.....அதை பார்த்தும் காபி அடிச்சிருக்கலாம்.

//1993 களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜாதி சண்டைகள் நடைபெற்றன.//

வரலாறு படிச்சவங்க இன்னும் நிறைய சொல்லுவாங்க, அதில் முக்கியம் 90 இல் ஆரம்பித்தது அல்ல ஜாதி சண்டைகள்....

//வருடம் 2000 ஹே ராம் படத்தில் ஹிந்து முஸ்லிம் வன்முறை கட்சிகள் இடம் பெற்ற படம்...2002 இல் குஜராத் கலவரம்.//

ஹிந்து -முஸ்லிம் வன்முறை பல வருஷமாக நடந்து வருது....சுதந்திரம் வாங்குன நாளில் இருந்து.

Paleo God said...

//Sammy said...//
ஒரு சுவையான கோ இன்சிடன்ஸ் சொல்லத்தான் இந்த பதிவு .. மற்றபடி நீங்கள் சொல்வதை நானும் ஒத்துக்கொள்கிறேன் நண்பரே. ஆனால் finance company நிகழ்வுகள் ஓரளவுக்கு பொருந்துவது போல தெரிகிறதா ?

Samuel | சாமுவேல் said...

//ஒரு சுவையான கோ இன்சிடன்ஸ் சொல்லத்தான் இந்த பதிவு ..////
உண்மையா நல்ல பதிவுங்க.... finance கம்பெனி சரியா ? தெரியலைங்க நமக்கு அந்த அளவுக்கு யோசிக்க தெரியாது...

சரி சமீபத்தில் வந்த கமல் படம் வைத்து ஒரு calculation போட்டு சொல்லுங்க, என்ன நடக்க போதுன்னு.

Paleo God said...

Sammy said...
//ஒரு சுவையான கோ இன்சிடன்ஸ் சொல்லத்தான் இந்த பதிவு ..////
உண்மையா நல்ல பதிவுங்க....

இதுதான் வஞ்சக புகழ்ச்சி அணியா??

//சரி சமீபத்தில் வந்த கமல் படம் வைத்து ஒரு calculation போட்டு சொல்லுங்க, என்ன நடக்க போதுன்னு//

என்னது இன்னொரு CALCULATIONA?? :-( அய்யய்யோ ( ஹும்ம் விடமாட்டீங்க போல )

Vidhoosh said...

பறவை உட்கார பனங்காய் விழுந்த கதையால்ல இருக்கு??

--வித்யா