பலா பட்டறை: தண்ணீர் தேசம்

தண்ணீர் தேசம்





சாலை மேல்  
பள்ளங்களற்று
சரி சமமாய் 
இருந்தாலும்..

தேங்கி நிற்கும்  
தண்ணீரில் வண்டி ஓட்ட
பயமாகத்தான் இருக்கிறது..

இதுவரை நான் 
விழுங்கிய
தண்ணீர் 

தனக்கடியில் 
பதுக்கிவைத்த 
பள்ளங்களில்
 
எனை விழுங்குமோ
என்ற பயத்தில்...   

8 comments:

ரிஷபன் said...

இதுவரை நான்
விழுங்கிய
தண்ணீர்
தனக்கடியில்
பதுக்கிவைத்த
பள்ளங்களில்
--இதுவரை படித்திராத கற்பனை..

Paleo God said...

நன்றி ரிஷபன்..

இன்றைக்கு மதியம் நான் சென்றிராத ஒரு புதிய பாதையில் தேங்கி நின்ற மழை நீரில் வண்டி ஓட்டிய பய(ண)த்தின் விளைவு இது>>!!

Ashok D said...

சிம்பிளா நல்லாயிருக்கு

Paleo God said...

நன்றி அசோக்...

Ramesh said...

எங்கள் வீதியும் இப்படியே....
கவிதை அழகாக இருக்கிறது
இங்கேயும் சில சில்லறைகள் கிடக்குது பாருங்கப்பா...
www.sidaralkal.blogspot.com

பூங்குன்றன்.வே said...

யாதர்த்தமான கவிதை..நல்லா இருக்கு பலா பட்டறை !!! உங்க பேர் என்ன?

Paleo God said...

நன்றி !!

றமேஸ்-Ramesh

பூங்குன்றன்.வே

தமிழ் said...

இப்பொழுது தான் இந்த வரிகளைப் படிக்கின்றேன்

அருமை