மனிதனாய் இருப்போம்..
என்றாய்..
மற்ற உயிர்களின் துச்சம்
உன் கண்களில் தெரிந்தது..
நாத்திகம் தான் சரி
என்றாய்
கைகளில்
மனிதர்கள் சிலைகளுக்கு
மாலைகள் தெரிந்தது..
என்ன நான் சொல்வது
சரிதானே என்றாய்...
நிலவில் தண்ணீர் இருப்பதும்..
ஒவ்வொன்றிலும் இறைவன் இருப்பதும்..
கடவுளல்ல கல் என்பதும்..
யாரோ சொல்லித்தான்
எனக்கும் தெரியும்..
நீ சொன்னதை நீ சொல்லியதாகவே
சொல்லிவிடுகிறேன்...
தற்குறிகளுக்கான உலகத்தில்
தினக்கடமை நிறைய உண்டு
உண்டு, உறங்கி, எழுந்து,
எல்லாவற்றையும் காதில் கேட்டு
பதிலேதும் சொல்லாமல்...
அப்படியே யாரேனும் கேட்டால்
நீ சொன்னதை நீ சொல்லியதாகவே
சொல்லிவிடுகிறேன்...
தனக்கென்ற கருத்தை
வேறதுவும் சொல்லாதபோது..
எனது கருத்தென்று
சொல்வதற்கு
ஆறறிவு தடுக்கிறது...
14 comments:
//தனக்கென்ற கருத்தை
வேறதுவும் சொல்லாதபோது..
எனது கருத்தென்று
சொல்வதற்கு
ஆறறிவு தடுக்கிறது... //
இப்படிதான் நம்மில் பலபேர் இருக்கிறோம் நண்பா.கவிதை அருமை..
நன்றி பூங்குன்றன் தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும்...
இதை எழுதும் போதும் என்னால் தொடர்ச்சியாக எழுதமுடியவில்லை. இன்னும் அந்த நாளை நினைத்தால் கண்கள் குளம் தான். நன்றி
//தனக்கென்ற கருத்தை
வேறதுவும் சொல்லாதபோது..
எனது கருத்தென்று
சொல்வதற்கு
ஆறறிவு தடுக்கிறது... //
வேறெப்படி சொல்றது.. நல்லா இருக்குன்னு!
கலங்காதீர்கள் அன்புசெல்வன். காலம்தான் மருந்து.
நன்றி ரிஷபன்..
தொடர் வருகைக்கும் ஊக்கத்திற்கும்
நல்லாருக்கு .
அருமையான கவிதை ஒன்று தந்ததற்கு நன்றி.
வாங்க ராஜு :)
வாழ்த்துக்கு நன்றி.
வாங்க சித்ரா :)
வாழ்த்துக்கு நன்றி..
சூப்பரா இருக்கு..
வாங்க பிரசன்னா :)
வாழ்த்துக்கு நன்றி
அற்புதம்
வாங்க ஜோதிஜி :)
வாழ்த்துக்கு நன்றி
Post a Comment