பலா பட்டறை: காம வயிற்றின் உணவுகள்..

காம வயிற்றின் உணவுகள்..





அடுத்த ஜென்மம் 
பெண்ணாய் பிறந்து 
அந்த வலி உணரக் கடவு 

என்ற ஒரு அசரீரி 
கேட்க்கும்வரை 

முதல் காற்று 
உள் வாங்கி.. 

முதலுணவு 
முலைப்பாலானபோதும்.. 

தனங்களிலேயே
தங்கிவிடுகிறது மனதும்
பார்வையும்..   





வயிறு நிரம்ப 
வயிறு நிரம்பா 

குழந்தையுடன் 
கைநீட்டி வந்தவளின் 
ஒருபக்க திறந்த 
மார்பு 
மூன்று சேதி சொல்லியது 

வயிறு நிரம்பிய என் 
காமப்பசி 

வயிறு நிரம்பாத 
குழந்தை பசி

வற்றிப்போனவளின்
தாய் பசி




12 comments:

சீமான்கனி said...

அடடா ஆயிரம் அர்த்தம் சொல்லும்..
உங்கள் கவிதையில் சிலாகித்து போகிறேன்...அருமை...பாலா...
வாழ்த்துகள்...

மணிஜி said...

அருமை. இன்று வலைச்சரத்தில் உங்களைப் பற்றி எழுதியுள்ளேன்.

http://blogintamil.blogspot.com/2009/12/blog-post_16.html

பூங்குன்றன்.வே said...

//வயிறு நிரம்பிய என்
காமப்பசி

வயிறு நிரம்பாத
குழந்தை பசி

வற்றிப்போனவளின்
தாய் பசி//

நல்ல வரிகள்..நிறைய சிந்திக்கவும், கண்கலங்கவும் வைக்கிறது நண்பா.

Paleo God said...

seemangani...

நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்

Paleo God said...

தண்டோரா.. சார், ரொம்ப பெரிய அங்கீகாரம் எனக்கு..மிக்க மகிழ்ச்சி .. நன்றி.

Paleo God said...

பூங்குன்றன்.. நேரே பழகாவிட்டாலும் எப்போதும்போல் உங்கள் பாராட்டு ஒரு நல்ல நண்பன் என் தோளை தட்டிக்கொடுப்பது போலவே உணர்கிறேன்.. நன்றி.

க.பாலாசி said...

//தனங்களிலேயே
தங்கிவிடுகிறது மனதும்
பார்வையும்.. //

உண்மையான வரிகள்...

இரண்டாமது இன்னும் உச்சம்...

நிலாமதி said...

உங்கள் கவிவரியின் அர்த்தங்கள் ஆயிரம். பாராடுக்கள். இன்று தான் முதன் முதலாய்..........

பாலா said...

wow
wow
aaraiyuthu

Paleo God said...

வாங்க க.பாலாசி :) நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Paleo God said...

வாங்க நிலாமதி நன்றி.. :-).
அழகான பெயர்.

நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்

Paleo God said...

வாங்க பாலா நன்றி.. :-).
நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்