பலா பட்டறை: பறவை சுதந்திரம்

பறவை சுதந்திரம்








சர்ப்பம் விழுங்கிய
இரை போல
நீள சாலைகளில்
பயணம்..

பிரிவுகளின்
முக்கோணத்தில்
முடிவுகளின் ஆரம்பம்

எல்லா பாதைகளும்
ஒன்றின் மேலேயே
என்றாலும்..

கூடாரம் போட்ட
வாழ்க்கை
எனை
சிறிய வட்டங்களில்
சிறை வைத்து
விடுகிறது..

வாழ்க்கை எனும்
சிலந்திக்கூடு
மொத்தமாய் பயணம்
செய்து முழுவதும்
காண தடுக்கிறது

ஆயிரமாயிரம் மைல்கள்
கடந்து
வாரிசு காக்க வந்த
நாரை கூட்டம்

மறுமைக்கான
ஆசையை கிளறிவிட்டது
ஒற்றை சிறகை
பறக்க விட்டு..

15 comments:

நிலாமதி said...

வாழ்க்கை எனும்
சிலந்திக்கூடு
மொத்தமாய் பயணம்
செய்து முழுவதும்
காண தடுக்கிறது.............

நிலாமதி said...

அழகான தத்துவ வரிகள்.

Paleo God said...

நன்றி நிலாமதி :)

அண்ணாமலையான் said...

கூடாரம் போட்ட
வாழ்க்கை
எனை
சிறிய வட்டங்களில்
சிறை வைத்து
விடுகிறது..”
நல்ல வரிகள்..

Paleo God said...

வாங்க அண்ணாமலையான் வாழ்த்துக்கு நன்றி நண்பரே..:)

சிவாஜி சங்கர் said...

//மறுமைக்கான
ஆசையை கிளறிவிட்டது
ஒற்றை சிறகை
பறக்க விட்டு..// Nalla varigal Nallairukku :)

Paleo God said...

வாங்க Sivaji Sankar

வாழ்த்துக்கு நன்றி நண்பரே..:)

Raju said...

செம..செம..

Ashok D said...

அருமை :)

Paleo God said...

♠ ராஜு ♠
வாழ்த்துக்கு நன்றி!!

^_^

D.R.Ashok
வாழ்த்துக்கு நன்றி!!

^_^

பூங்குன்றன்.வே said...

/வாழ்க்கை எனும்
சிலந்திக்கூடு
மொத்தமாய் பயணம்
செய்து முழுவதும்
காண தடுக்கிறது//

தப்பா எடுத்தக்க வேண்டாம் நண்பா.ஒரு சந்தேகம்தான்.இந்த கவிதைக்கான கரு ஒரு சிறைப்பறவையை பற்றியதா இல்லை பறவை மூலமாக வாழியலை பற்றியது?
ஒரு சின்ன குழப்பம் நண்பா.

Paleo God said...

அன்பு பூங்குன்றன் எப்போ வேணாலும் நீங்க கருத்து சொல்லலாம் தவறென்றால் தர்க்கமே கிடையாது அட ஆமால்ல என்று கற்றுக்கொள்ளவே விருப்பம் :) இது எப்படி வந்ததுன்னு விளக்கி ( ?? ) இருக்கிறேன் சரியா பாருங்கள் ::)))


சர்ப்பம் விழுங்கிய
இரை போல
நீள சாலைகளில்
பயணம்..
(நாம தினம் தினம் பயணம் செய்யும் சாலைகள்தான்... அரச்ச மாவு )

பிரிவுகளின்
முக்கோணத்தில்
முடிவுகளின் ஆரம்பம்

(பாதை இரண்டாய் பிரியும் போது கிடைக்கும் அந்த முக்கோணம் நாம எந்த பக்கம் போவது என்ற முடிவு எடுப்பதற்குரிய ஆரம்பம்)

எல்லா பாதைகளும்
ஒன்றின் மேலேயே
என்றாலும்..

(இது அங்க போகும் பாதை இது இங்க போகும் பதை என்றாலும் எல்லாமே பூமிப்பந்தில் மேலேதான் (பறவை பார்வை)

கூடாரம் போட்ட
வாழ்க்கை
எனை
சிறிய
வட்டங்களில்
சிறை வைத்து
விடுகிறது..
மொத்தமாய் பயணம்
செய்து முழுவதும்
காண தடுக்கிறது
வாழ்க்கை எனும்
சிலந்திக்கூடு
(சட்டுன்னு வீடு வாசல் சொந்த பந்தம் எதுவும் விட்டுட்டு உலகம் சுத்த கிளம்ப முடியுமா என்ன?? அங்கனக்குள்ளதான் சுத்திகிட்டு கிடக்கோம் )


ஆயிரமாயிரம் மைல்கள்
கடந்து வாரிசு காக்க வந்த
நாரை கூட்டம்

மறுமைக்கான
ஆசையை கிளறிவிட்டது
ஒற்றை சிறகை
பறக்க விட்டு..

(அதுங்க மட்டும் கூலா கண்டம் விட்டு கண்டம் பறக்கறத பாக்கும்போது ஹும்ம் அடுத்த ஜென்மம்ன்னு ஒன்னுருந்தா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு)

ஓரளவுக்கு சரியா வந்துட்டனா நண்பா?

பூங்குன்றன்.வே said...

யு ஆர் ஸோ ஸ்வீட்!
இவ்வளவு அழகா விளக்கம் தந்ததற்கு நன்றி நண்பா.

நான் கொஞ்சம் மக்கு பாஸ்.

சில விஷயங்களை ரொம்ப சீக்கிரமா புரிஞ்சுப்பேன்;சில விஷயங்களை போட்டு குழப்பிப்பேன்;

இப்போ உங்கள் கவிதையும், அதற்கான கருவும்,அர்த்தமும் விளங்கி விட்டது.மீண்டும் நன்றியுடன்,உங்கள் நண்பன்.

சீமான்கனி said...

//மறுமைக்கான
ஆசையை கிளறிவிட்டது
ஒற்றை சிறகை
பறக்க விட்டு..//

தத்துவம் நிறைத்த வார்த்தைகள்...வாழ்த்துகள் நண்பா..

தமிழ் உதயம் said...

ஆயிரமாயிரம் மைல்கள்
கடந்து
வாரிசு காக்க வந்த
நாரை கூட்டம் மனிதனும் ஒட வேண்டியுள்ளதே நாடு நாடாக... அகதி வாழ்க்கை வாழ