என்னை கவர்ந்த முக்கிய பதிவர்களின் முதல் பதிவுகள்
ரொம்ப சிம்பிளான சூத்திரம் என்னன்னா அடுத்தவங்க என்ன பண்றாங்களோ ஒருமுறை அத பாத்துட்டு நாம ஒரு ரோட்ட போட்டுக்கறது... நான் பதிவு போட ஆரம்பிச்சப்போ முதலில் நான் கண்ட, வியந்த சில பதிவர்களின் முதல் பதிவுகள் இங்கே... (அவர்களின் அனுமதி இல்லாமலேயே ) 1992 லிருந்து நெட்டில் பழம் தின்றாலும் நான் தமிழ் பதிவுலகம் கண்டுகொண்டதென்னமோ போன மாதம்தான்.
மொத நாள் பாத்தது::
இட்லிவடை, அங்கேர்ந்து நூல் பிடிச்சி போனது வால்பையன் அவரின் பதிவுகளை பார்க்கும்போது கிடைத்தவர்தான் வித்யா அவர்கள், இவங்களோட பதிவுகளிளிருந்துதான் கொஞ்ச கொஞ்சமாய் எட்டி பார்த்தது , மெல்ல பழகி கொஞ்சம் கொஞ்சமாய் தவழ்ந்துகொண்டு இருக்கிறேன்..
ஒவ்வொருத்தரா பார்த்துடலாம்...
************************************************************
இட்லி வடை...அனேகமா எல்லாருக்கும் தெரிந்தவர் (வர்கள்??) சுவாரஸ்யங்களுக்கும், காரத்துக்கும் பஞ்சமில்லாத பக்கம்...அவரோட முதல் பதிவு..
27/10/2003..
இந்த Blogகுக்கு ஏன் இட்லி வடை என்று பெயர் வைத்தேன் ?
தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள் - இட்லி வடை என்று பெயர் வைத்தால் கட்டாயம் இங்கு வருவார்கள்!
நான் யார் ?
இட்லி வடைக்குள் ஒளிந்து கொள்ள நான் சாம்பார் அல்ல - உங்களில் ஒருவன், உங்கள் நண்பன்,
உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் சில சமயம் உங்கள் மனசாட்சி.
(நான் யார் என்று சொன்னால், சட்னி ஆகிவிடுவது நிச்சயம்! அதனால் ....)
************************************************************
12/09/2007
வால்பையன் .. இவரின் படைப்புகள் செம காரம் சொக்க தங்கம் வியாபாரம் என்று சொல்லும் இவரின் வலைப்பக்கம் முழுக்க ரௌன்டு கட்டுவது சாதிகள் இல்லையடி பாப்பா(இத்தோட நிறுத்திக்கிறேன்) மொத்தமா இவர் சொல்றது ஜாதி வேனாம்ம்யா நல்ல மனிதர்களாய் இருப்போம் நல்ல உலகத்தை படைப்போம். பார்ட்டி ஒரு பதிவு எழுதிட்டு வேல பாக்க போயிடுது மவனே உள்ள போய் வெளிய வந்தா காது கிழிஞ்சிடுது.. மொத பக்கம் அறிமுகம் என்ற தலைப்போடு நின்னிடுது...பக்கம் சரியா ஓபன் ஆகல..
MONDAY, NOVEMBER 12, 2007
************************************************************
அப்புறம் விதூஷ் என்கிற வித்யா மேடம்.. மிக நல்ல பதிவுகள் இவரிடம் கண்டதுண்டு என்னோட மூணாவது பதிவையே இவர் சொன்ன ஒரு பதிவிலேர்ந்துதான் ஆரம்பித்தேன் முதல் பின்னூட்டம் போட வந்தவர் template இல் கோளாறு என்று எச்சரிக்கை அவரது பக்கத்தில் சொன்னதால் பட்டறையில் வேலை ஒழுங்காய் நடக்கிறது. அவங்க எழுதிய முதல் பதிவு.. வேல வெட்டி இல்லாம பதிவு எழுதலன்னு மொத வாக்கியமே...பக்கோடா பேப்பர்கள் செம வரைட்டி..
16/02/2009
on Monday, February 16, 2009
When nothing was to be done, I blogged.
This day, Year 2000, Rajeswari / Vaishnavi / Vaishu, My eldest sister Gayathri's daughter was born. I wish her a happy birthday and a peaceful long life. Vaishu brought many changes in my life, of which, she made me realize what real affection is. She is the first child with whom I spent most of my time. She loves me a lot and sends gifts on mother's day to me too.
She is also the most adored akka and friend of my daughter Darshini. Vaishu and Darshini mean a lot to me, as they made me realize the purpose of my life. They made me explore more, knowledge, that I can answer their questions. They made me smile and laugh without any reason. I have many things to say to them, I start this blog as a channel to share my thoughts and some moments, on this day to show my gratitude to Vaishu. Thanks Vaishu. I love you a lot.
************************************************************
அடுத்து தண்டோரா சார்... வித்யா மேடம் வலைப்பக்கத்தில் அகநாழிகை புத்தக வெளியீட்டு விழா பார்த்துவிட்டு KK நகர் போனதில் இவரை சந்தித்தேன். பேசியது குறைவென்றாலும் மனதில் நின்றவர். கவிதையோ பதிவோ நெத்தியடி இவர் ஸ்டைல். என்னை போன்ற பதிவர்களை அவர் பக்கத்தில் அறிமுகப்படுத்துவது ஒரு நல்ல காரியம். அவரின் வலைப்பக்கத்தில் கிடைத்த முதல் பதிவு...( இதுதான் முதல் பதிவா தெரியல சார் )
தலைவலியும்,முதுகு வலியும்
POSTED BY தண்டோரா ...... ON FRIDAY, FEBRUARY 13, 2009 /
தீராத தலைவலிக்கு மருந்து?மருத்துவர்கள் சாதனை..போயே போச்சு....இட்ஸ் கான்...
போயீந்தே...
சரிய்யா...எப்படி?
முதுகில் கத்தி போட்டால் ...போதுமாம்..
அட...தலைவர் அடிச்சார் பாருங்க ஒரு ஜோக்.. ஏ அப்பா ..இவ்வளவு கட்டணமா..
சீக்கிரம் வீட்டுக்கு போயிடனும்..
*****************************************************************************************************************
11/08/2004
டோண்டு சார் இவர் பக்கங்களை படிப்பது மட்டுமே பின்னூட்டம் இட்டதில்லை.. வால்பையன் அவர்களின் தளத்திலிருந்து நூல் பிடித்து போனேன்.. மொழி பெயர்ப்பில் பழுத்த பழம்... நல்லா படிச்சிட்டு பரிச்சயமாக வேண்டியதுதான் (அட பின்னூட்டத்தில தான்) பழுத்த பழம்ன்னு சொன்னேன் இல்லையா - பஞ்சாமிர்தம் இவரோட ஸ்பெஷல். சாரோட முதல் பதிவு
Dondus dos and donts
இதோ வந்தேன் டோண்டு
வலைப்பூ பதிப்பது இவ்வளவு எளிதாக இருக்கும் என்று கனவிலும் எண்ணியது இல்லை. தமிழில் தட்டச்சு செய்கிறோம் என்பதைப் பார்க்க மிக்க மகிழ்ச்சி ஏற்படுகிறது.
நான் ஒரு மொழிபெயர்ப்பாளன். ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளிலிருந்து ஆங்கிலத்துக்கும் ஆங்கிலத்திலிருந்து ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளுக்கும் மொழி பெயர்ப்பது என் வேலை. மின் பொறியியலில் பட்டம் பெற்று அத்துறையில் 23 வருடம் வேலை செய்த அனுபவம் உண்டு. மொழி பெயர்ப்பாளனாக ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் 26 வருடங்களுக்கு மேல் அனுபவம் உண்டு. புத்தகஙள் படிப்பதில் மிக்க விருப்பம்.
என் கன்னி முயற்சிக்கு சக வலைப்பதிவாளர்களின் ஒத்துழைப்பை எதிர் பார்க்கிறேன். பின் வரும் வலைப்பூக்களில் மீண்டும் எழுதுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
************************************************************************************************************************
அடுத்தது டெக் ஷங்கர் எனக்கு technical துரோனர்களில் இவரின் வலை பக்கமும் ஒன்று. பின்னூட்டம் வருகிறதோ இல்லையோ சும்மா கில்லி மாதிரி மென்பொருள் விஷயங்கள் அளித்துக்கொண்டே இருப்பது இவர் பணி இதுவும் எனக்கு 'கிடைத்த' முதல் பக்கம்தான்...
பிட் டோரண்ட் என்பது ஒரு கணிணி நிரல். இது பிராம் கோகன் மற்றும் பிட்டோரண்ட் என்பவர்களால் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் பிட்டோரண்ட் புரோட்டோக்கால் வாயிலாக கோப்புகளை இணையேற்றம் / இணையிறக்கம் செய்யலாம்.பிட்டோரண்ட் என்பது அதன் அலுவலகப்பெயராக 'மெயின்லைன்' எனப்பட்டது.
'கோப்புப்பகிர்வான்' எனப்படும் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் கோப்புகளை ஒருவர் ஏற்றியபின் அதன் லின்க் ஐ பெற்று அதை பிறருக்குத் தெரிவிப்பார். அந்த லின்க் மட்டும் தெரிந்தால் ராப்பிட்சேர், மெகாஅப்லோட் முதலியவற்றில் இலவசமாகவே இணையிறக்கம் செய்யமுடியும்.ஆனால் சில ஸ்லாட்டுகள் மட்டுமே இலவசமாக கிடைக்கும். சிலாட்டுகள் முடிந்தபின் இணையிறக்கம் செய்வதற்குத் தவமாய்த் தவமிருக்க வேண்டும்.
இஸ்னிப்ஸ், 4ஷேர்டு முதலிய தளங்கள் தலைக்கு 5 ஜிபி வரை இலவச இடம் கொடுத்து நன்றாக கோப்பிறக்கம் செய்ய வழிவகை செய்கிறார்கள்.
***************************************************************************************************************************************
அடுத்தது
20/02/2009
மேல சொன்னமாதிரி இன்னொரு கில்லி இவரின் வலைபக்க வழியே உபுண்டு சி டி கிடைக்கப்பெற்று சந்தோஷமாய் அனுபவித்துக்கொண்டு இருக்கிறேன்.. மென்பொருள் தகவல் களஞ்சியத்தில் இவரும் எனக்கு வழிகாட்டி..
இலவச லினக்ஸ் CD /DVD
இந்த வலைப்பூ தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
லினக்ஸ் மற்றும் சுதந்திர இலவச மென்பொருட்கள் (Free and open source software (FOSS)) பற்றி இதில் பேசப்படும்.
குட்டி குட்டியாக நிறைய பதிவுகள் போடத்தான் எனக்கு வசதி. ஒவ்வொன்றும் ஐந்து பத்து லைன் இருக்கும்.
இந்த தருணத்தை கொண்டாடுவதற்காக பத்து இலவச லினக்ஸ் குறுவட்டுகளை சென்னைக்காக கொடுக்கப்போகிறேன்.
*************************************************************
30/05/2009
அடுத்தது கணிநுட்பம் அன்புச்செல்வன் அவர்கள் தரும் கணினி மென்பொருள் கூகிள் பயன்பாடுகள் இவர் சொன்ன தகவல வெச்சு இப்போ கூகிள் வாய்ஸ் மூலமா அமெரிக்காவுக்கு இலவசமா பேசிக்கிட்டு இருக்கேன் கில்லி மூணு. இவரோட முதல் பக்கம்.
நம் அன்றாட வாழ்வில் கணினிப் பயன்பாடு அவசியமாகிவிட்டது. காய்கறி கணக்கு முதல் வங்கி கணக்கு வரை அனைத்தையும் சேமிக்க பராமரிக்க செய்யும் அளவிற்கு கணினி நம் வாழ்வின் அங்கமாகிவிட்டது. நாம் சாதாரணமாக உபயோகப்படுத்தும் கனிணியில் பல வசதிகள் நமக்கு தெரியாமலே பயன்படுத்தாமல் உள்ளோம். ஏதோ எனக்கு தெரிந்தவற்றை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள இவ்வலைப்பூ உதவும் என நினைக்கிறேன்.
பார்க்கலாம்...
கணினி மற்றும் கணினியைப் பற்றி மட்டும்
*************************************************************
24/09/2009
அடுத்தது நம்ம பூங்குன்றன் நல்ல நேர்த்தியான மனிதர் (இல்லன்னு அவர் சொல்லல !) என்னை விட நல்ல கவிதை படைக்கும் பாக்தாத் பேரழகன்,, வலையில் கிடைத்த நல்ல தோழமை ஒன்று...அவரோடமுதல் பக்கம்
"யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர்தர வாரா
கவிதைகள்
சிறு இடம்
****************
உனக்கென ஒரு பாடல்.
உனக்கென ஒரு தேடல்.
உனக்கென ஒரு மழை.
உனக்கென ஒரு கவிதை.
உனக்கென ஒரு உலகம்.
அதில் எனக்கே எனக்கென
ஒரு சிறிய இடம்.
*****************************************************************************
12/05/2005
அடுத்து நிலா ரசிகன் அகநாழிகை விழாவில் அறிமுகமான நண்பர்.. நல்ல படைப்புகளுக்கு சொந்தக்காரர்.. மெத்தென்ற அவரின் உள்ளங்கைகள் இன்றும் என் உள்ளங்கை நினைவில் உள்ளது..அவரின் முதல் பக்கம்..(?)
புல்தரையும் நானும்..
சிறிய வயதில்சினிமாவில்தான்
முதன்முதலில்புல்தரையை
பார்த்து வியந்தேன்..
ஒரு நாளாவது புல்தரையில்
அமரவேண்டும் என்கிற என்
ஆசை அரசியல்வாதியின்
நாற்காலி ஆசையைவிட
அதிகமாகிப்போனது..
உயர்கல்விக்காக நகரம்வந்தபோது
நண்பர்கூட்டத்தின்கிண்டலுக்கு
நடுவிலும்பூங்கா
ஒன்றில் புல்தரையைக்கண்டவுடன்
அம்மாவின் மடியில்
உட்காரஓடும் குழந்தையாய்ஓடிச்
சென்று அமர்ந்தேன்..
புற்களின் கிரீடமாய்
இருந்தபனித்துளியிடம் நலம்விசாரித்தேன்..
இப்படியாக,
எவ்வளவுதான்புல்தரையை
நேசித்தாலும் வராத
காதலிக்காக ஒரு
மணிநேரமாக காத்திருக்கையில்
புற்களைபிய்த்து
எறிந்ததில்மறந்தேபோனது
புல்லின்புனிதம்!
*****************************************************************************
12/10/2009
அடுத்தது நம்ம எரும்பார்.. அகநாழிகையில் இவருடன் நானிருக்கும் புகைப்படம் கேபிள் ஜி வலைப்பக்கம் வழியே வெளியே வந்தது.. ஏகப்பட்ட தேடலோட சுற்றி அலையும் ஜீவன் அடுத்த சந்திப்பில் நன்றாய் பேச வேண்டும் இவருடன்... அவரோட முதல் பதிவு..
வானவில் போல் வாழ்க்கை....அழகானது நிலையற்றது
எறும்பு
எறும்பு குழுவாக வாழும் ஒரு பூச்சியினமாகும். இது உலகின் எல்லாப் பகுதிகளிலும் காணப்படுகிறது. 2006 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை வெப்ப வலயங்களிலேயே வாழ்கின்றன.
********************************************************************
11.06.2009
அடுத்தது பா ரா அவர்கள் எனக்கு பிடித்த எல்லோருக்கும் பிடித்த ஒரு நல்ல கவிஞர். IVARDUAIYA முதல் கவிதை தொகுப்பு வாசித்துக் கொண்டே இருக்கிறேன் ...அவருடையது இங்கே...
கருவேல நிழல்.....
முள்ளும் இருக்கு...நிழலும் இருக்கு... வாழ்வு போல..
காரணப்பெயர்
அப்பாவிடம் ஒரு நிலம் இருந்தது!
"பெரியனஞ்சை" என்று பெயர்!
பெரியனஞ்சைக்கு பிறகே
அம்மாவை பிடிக்கும் அப்பாவிற்கு.
கிணறு வெட்டி, கரும்புவளர்த்து,
கடலை நட்டு,கத்திரி பயரிட்டு,
தசை நார் தெறிக்கும் அப்பாவை
அறிவேன் வயலில்!
கொண்டுசெல்லும் கஞ்சி ஊறுகாயின்
மண்டிநீரையும் வயலில் உமிழ்வார்
ப்ரியம் பொங்க.
ஒரு நாள்,ஒரு பொழுது
மழை ஏமாற்றியதில்லை அப்பாவை.
மழையும் அப்பாவும் ஒன்றுதான்
விரும்பி ஏமாற்றுவதில்லை!
காலத்தின் தேய்மானத்தில்
பெரியனஞ்சயை தோற்றார்
அப்பா ஒரு நாள்.
பிறகு....
அப்பா சாராயம் குடித்தார்,
வெங்காயகடை வைத்தார்,
திரையரங்கில் வேலை பார்த்தார்,
யார் அழைத்தாலும்
போய் உழைத்தார்...
அவ்வளவு இடிபாடுகளுக்கிடையேயும்
இயங்கிக்கொண்டே இருக்க
ஐந்து காரணங்கள்
இருந்தது அப்பாவிற்கு...
எங்கள் ஊரில்
நிலங்களுக்கு பெயர்
இருந்ததுபோல்
காரணங்களுக்கும்
பெயர் இருந்தது...
அது.....
சுமதி
புனிதா
ராஜா
தேவி
இந்திரா!..
*****************************************************************************
22.11.2009.
அடுத்தது கமலேஷ் எனக்கு பிடித்த பெயர். நல்ல கவிதைகளுக்கு சொந்தக்காரர். அடிக்கடி என் பக்கத்திற்கு வந்து ஊக்கம் அளிப்பவர் அவருடையது..
நீண்ட நாளைக்கப்புறம் எழுத வந்ததாய் சொல்லும் இவருடைய முதல் பக்கம்..
TO FIND YOURSELF….. FIRST LOSE YOURSELF…..
நானும்,என் கவிதைகளும்.....
பெரிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கி இருக்கிறேன் ......
வாழ்க்கையோடு முரண்பாடு ஏற்பட்ட ஒரு சூட்சம புள்ளியில் என் எண்ணங்களுக்கும், எழுதுகோலுக்குமான தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப் பட்டது...
சரியாக மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் சில பூக்களை என் கையில் கொடுத்து உடன்பட்டு இருக்கிறது இந்த வாழ்க்கை.... .
இந்த இடைப்பட்ட நாட்களில் நான் காகிதங்களை தனிமையில் சந்திக்கும் போதெல்லாம் ஏதோ ஒரு கவிதை என் அருகில் நின்று என்னையே பார்த்துக்கொண்டே இருப்பது போலவே இருக்கும்...
நான் தனிமையை உடைக்கும் போது சில கண்ணீர் துளிகளை தந்துவிட்டு காற்றில் கரைந்து போகும்....
என் கவிதைகள் வைரமுத்துவின் கையில் உள்ள சூரியன் இல்லை என்றாலும், என் கவிதைகளயும் ரசித்து படிக்க ஒற்றை இலக்க உறுப்பினர் கூட்டம் ஒன்று இருக்கத்தான் செய்தது. அதன் எச்சமாய்.... இந்த முதல் பதிவில் என் கவிதை பற்றி கவிதையில் சொல்லி இருக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னுட்டத்தில் சொல்லுங்கள்.........
*******************************************************
04/08/2009
அடுத்தது தியாவின் பேனா.. பலபேர்களுக்கு பரிசுகள் அளித்து ஊக்கப்படுத்தும் உன்னத மனமும் நல்ல கவிதைகளுக்கும் சொந்தக்காரரான இவரின் முதல் பக்கம்...
என் கவிதை
எனக்கும் கவிதை
எழுதத் தெரியும்
எழுத்து அசை சீர்
அடி தொடை யாப்பு
எதுவுமே
எனக்குத் தெரியாது
ஆனாலும்
எனக்கும் கவிதை
எழுதத் தெரியும்...
கலியொடு வெண்பா
ஆசிரியம் வஞ்சிப்பா
எதுவுமே நானறியேன்
எதுகை மோனை
தூக்கு துள்ளல்
அத்தனையும்
எனக்குத் தெரியாது
ஆனாலும்
எனக்கும் கவிதை
எழுதத் தெரியும்...
மரபுக்கு பிரியாவிடை
கொடுத்து
பாமரன் முதல்
படித்தவன் வரை
விருப்புக் கொண்ட
புதுயுகக் குழந்தை
என்
புதுக்கவிதை
***************************************************************************************************************
01/09/2009
அடுத்தது ப்ரியா இவர் வரைந்த படங்கள் மிகவும் அழகானவை, கவிதையும் எழுதுவார் என்பது முதல் பக்கத்தில் தெரிந்தது.. நல்ல படங்கள் நிறைய வரைய விரும்பும் சூழல் ரசனை உள்ளத்துக்கு சொந்தக்காரர்.. அவரின் முதல் பக்கம்..
தவிக்கின்ற உணர்வுகள்... மெளனமான வார்த்தைகள்... சின்னசின்னதாய் சில கிறுக்கல்கள்..
கனவுகளே இன்று கவிதையாய்.........
கனவு என்பது ஒரு சிறிய வாழ்க்கை!
வாழ்க்கை என்பது ஒரு நீண்ட கனவு!
இவற்றிலிருந்தே ஆரம்பம்... என் முதல் பயணம்......
********************************************************************************
17/05/2009
அடுத்தது என் டயரி நான் ரசிக்கும் வித்தியாசமான ஒரு வலைப்பக்கம் இது. கலவையான விழயங்கள் நேர்த்தியாய் சொல்லும் இவரது பதிவுகள் எனக்கு பிடிக்கும் .. பதிவின் கடைசியில் ஒரு சின்ன மேட்டர் சொல்வது இவர் ஸ்டைல்.. மேட்டர் தான் சின்னது விஷயம் பெரிசு.. அவரோட முதல் பதிவு
என் டயரி
டயரி எழுதப் போறேன், டயரி!
May17
டயரி என்றால் என்ன? ஒருவரின் அனுபவங்கள், எண்ணங்கள், ரசனைகளின் பதிவுகளே டயரி. அவற்றை மற்றவரும் படித்தால்தான் என்ன குடி முழுகிப் போய்விடும்? அப்படிப் பிறர் படிக்கக் கூடாதவற்றை டயரியில் எழுதி வைத்தாலும் ஆபத்துதான்.
இது என் டயரி. எல்லோரும் படிக்கலாம். இதில் உருப்படியான விஷயம் இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள். ரசிப்பதற்கு ஏதேனும் இருக்குமானால் ரசியுங்கள். ஒன்றும் இல்லை என்றால் இங்கே வந்து உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காதீர்கள்.
தினசரியே ஏதேனும் சில வரிகள் எழுதலாம் என்றிருக்கிறேன்.
நான் சாதாரண நாளிலேயே இரண்டு மாதம் சேர்ந்தாற்போல் டயரி எழுதியதில்லை. ஆனால் இந்த மின் டயரியை தொடர்ந்து எழுதுவேன் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது.
அதிகம் எழுதி அறுக்க மாட்டேன். கொஞ்சமாகத்தான் அறுப்பேன்.
சரி, நாளை சந்திப்போம்.
*****
வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை. உருவாக்குவதுசந்தோஷமானது;வெளியிடுவது சிக்கலானது; காப்பாற்றுவதுதான்கடினமானது!
**************************************************************************
APRIL / 2008
அடுத்தது
உலக சினிமா பற்றியெல்லாம் நாளிதழ்களில் படிப்போதோட சரி இவர் போல பதிவெழுதும் முக்கியமானவர்களாலதான் அத எங்க போய் பார்க்கனம் டிக்கெட் எடுக்கவேணும்,, அதன் விமர்சனகள்.. என்று நல்ல திரை படகளை அறிமுகம் செய்யும் நண்பர்... இவரோட பெயர் மற்றும் வலைப்பெயர் ரெண்டுமே வித்தியாசமானது... அவரோட முதல் பக்கம்.. (அசத்திடீங்க சார் )
என் சந்தோஷங்களையும் ,சகித்து கொண்டவைகளையும், பகிர்ந்து கொள்ள ஒரு தளம். (18+ வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும்,வாழ்க்கை பற்றிய புரிதல் உள்ளவர்களுக்கான இடம் இது) அன்புடன்- ஜாக்கிசேகர்
சமர்பணம்
கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றூ கொடுத்த ஏகலைவன், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர்
**********************************************
அடுத்தது எனக்கு கிடைக்காத ஆனால் அடிக்கடி விவரம் தோண்டுகிற மேலும் முக்கிய பதிவர்கள்...
திரு. BUTTERFLY சூர்யா ,
திரு. CABLE சங்கர்.
(என் திருமுகத்தை வெளிச்சம் போட்டு காட்டியவர்)
உலக சினிமாக்கள் பார்ப்பதும் ரசிப்பதும் ஒரு முக்கியமான தேடல் அதில் இவர்கள் போன்ற நண்பர்கள் வழிகாட்டுதல் இருந்தால் உன்னத படைப்புகள் காணக் கிடைத்துக்கொண்டே இருக்கும்..
(என்ன செய்தும் உங்கள் முதல் பக்கம் எனக்கு கிடைக்க வில்லை - மன்னிக்க..)
முடிவாக நான் வலைப்பக்கம் வந்தது போன மாதம்.. அதற்குள் எனக்கு கிடைத்த சிறந்தவைகள் மேலே.. இன்னும் நிறைய பேர் உண்டு.. பிறிதொரு சமயம் பகிர விருப்பம்...
நன்றி..வணக்கம்.