மன வெள்ளித்திரையில்
இறந்தகால வாழ்க்கை
படம்
அனுதினமும் பிறந்து
அழகழகாய் நகரும்..
திரைக்கதையோ,
காட்சிகளோ, வசனமோ
நடிப்புகளோ,
எப்போதும் அது
மாறியதில்லை..
சோகமோ, மகிழ்ச்சியோ..
சலிப்பினை தருவதில்லை
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
படமது
ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது...
துயரங்களை இன்பமாக்கி
பிரிவுகளை காதலாக்கி
துரோகங்களை நட்பாக்கி
ஏழ்மையை செல்வமாக்கி
இழப்புகளை மீட்கலாம்
என்றாலும்...
காட்சிகள் மாற்றி அமைக்க
யாருக்கும் விருப்பமில்லை
உயிர்ப்போடு நிகழ்காலம்
வித விதமாய்
வாழ்க்கை படம்
வண்ணத்தில்
காட்டியபோதும்
இறந்தகால
படமது
ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது...
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
எப்போதும் மனதுக்குள்
நன்றி. கவிதைக்கான கரு தந்த அழகு நண்பன் பூங்குன்றன்.
10 comments:
பிடித்தாலும்
பிடிக்காவிட்டாலும்
படமது
ஓடிக்கொண்டேதான்
இருக்கிறது..."
ஆம்.. உண்மைதான்
சில நிகழ்வுகள்
நெஞ்சை அழுத்திய போது
இறந்தகால நினைவுகள்
மேற்பரப்புக்கு வருகிறது....
ம்ம்... மனசில் ஒட்டிக்கொண்ட நல்ல கவிதை தொடருங்கள்..
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது.. உங்கள் வார்த்தையில் தெரிகிறது :-))
என்னை ரொம்ப நெகிழ வைக்கும் வார்த்தைகளால் பாராட்டும் அந்த பெருந்தன்மைக்கு நான் தலை வணங்குகிறேன் நண்பா.
கரு எனது என்று சொல்லி அழகிய கவிதை எழுதி என்னை பெருமைப் படுத்தியதற்கு கோடி நன்றிகள்..
வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.பிறகு பேசுகிறேன்.
நன்றி அண்ணாமலையான் ..:))
வாங்க றமேஸ்-Ramesh என்னுத விட இது சூப்பர்..
//சில நிகழ்வுகள்
நெஞ்சை அழுத்திய போது
இறந்தகால நினைவுகள்
மேற்பரப்புக்கு வருகிறது....//
கலக்கிட்டீங்க... நன்றி
// Sivaji Sankar said...
வாழ்க்கையை புரிந்து கொள்ள முடியாது.. உங்கள் வார்த்தையில் தெரிகிறது :-))//
அதேதாங்க... ஆறறிவு இருந்தும் அறிய முடியா விடை அது.. (அடுத்த கவிதைக்கு அச்சாரம் ரெடி :))) ) நன்றி...வந்ததுக்கும் வாழ்த்துக்கும்..
// பூங்குன்றன்.வே said...
என்னை ரொம்ப நெகிழ வைக்கும் வார்த்தைகளால் பாராட்டும் அந்த பெருந்தன்மைக்கு நான் தலை வணங்குகிறேன் நண்பா.
கரு எனது என்று சொல்லி அழகிய கவிதை எழுதி என்னை பெருமைப் படுத்தியதற்கு கோடி நன்றிகள்..
COOL YAAR..!!
SAME BLOOD..:)))
வேறு எதுவும் சொல்ல வார்த்தைகள் வரவில்லை.பிறகு பேசுகிறேன்//
ரைட்டு...^_^ :)))
SAME BLOOD..:)))
வழக்கை படம் பிடிச்சு காட்டி இருகிங்க....உங்களுக்கும் நண்பர் பூங்குன்றன் -க்கும் வாழ்த்துகள்...
நன்றி seemangani ..:))
Post a Comment