சின்ன சின்ன
உடையுடுத்தி
சிறுக சிறுக
பெண்களெல்லாம்
பெருகி பெருகி
கடற்கரையில்
மெல்ல மெல்ல
நடையில் என்னை
கொல்ல கொல்ல
வரக்கண்டேன்..
நாளை
வருவாளென்று
நாளை
வருவாளென்று
நேற்றுகளை
சேகரித்துக்கொண்டிருக்கிறேன்
இன்று வருவாளென்று
இன்று வருவாளென்று
இமைகளை
திறந்து கொண்டிருக்கிறேன்
நேற்று வந்தாளென்று
நேற்று வந்தாளென்று
நினைப்பதற்கேனும்
நாளை வருவாளென்று ....!
நெஞ்சில்
ரணமிருக்கும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும்
நித்தமும் உனைக்கான
ரணத்தில் குருதி வழியும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும்
19 comments:
கவிதை அருமைங்க ... எப்படிங்க இவ்ளோ பெரிசா எல்லாம் எழுதுறீங்க
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
வாங்க மீன்ஸ் ... நீங்க ஏதோ பின் நவீனத்துவமா பின்னூட்டம் போட்டமாதிரி இருக்கு (பாராட்டறீங்களா .. திட்டறீங்களா ??!!) எதுவா இருந்தாலும் நன்றி ..:))
// நெஞ்சில்
ரணமிருக்கும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும் //
ஆஹா..ரொம்ப ரொம்ப கனவை வளர்த்துட்டீங்க போல நண்பா..
எதைப்பார்த்தாலும் கவித..கவித..கலக்குறீங்க!!!
(உங்க பேரை சொல்லவே இல்லையே நண்பா )
இன்று வருவாளென்று
இன்று வருவாளென்று
இமைகளை
திறந்து கொண்டிருக்கிறேன் ..............இந்த காத்திருப்பு Bay watch அழகிக்கா?
...... கவிதை(கள்) நல்லா இருக்குங்க.
கடற்கரை சிறுசுகளில்
உங்கள் மனது
கரைமோதும் அலைகள்
காயப்படுத்திய அந்த
கனவுகள்
கலையாமல்
இன்னமின்னும்
கவிதை வர
வாழ்த்துக்கள்
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தோழரே...
(ஆனால் இந்த பீச் பக்கமெல்லாம் அதிகமா போகாதிங்க...)
போனால் வர கவிதை செலக்ட் பன்ற போட்டோ எல்லாம் இப்படிதான் இருக்கும்...
இன்னும் பே வாட்ச் மயக்கம் போலையா....
பூங்குன்றன்.வே said...
// நெஞ்சில்
ரணமிருக்கும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும் //
ஆஹா..ரொம்ப ரொம்ப கனவை வளர்த்துட்டீங்க போல நண்பா..
எதைப்பார்த்தாலும் கவித..கவித..கலக்குறீங்க!!!
(உங்க பேரை சொல்லவே இல்லையே நண்பா )//
அய்யோ அந்த கொடுமைய ஏன் கேக்கறீங்க பூங்குன்றன்... 18 வருஷம் சும்மா இருந்த மனசு.. இப்ப கிடந்து துடிக்கிது.. எதையும் நான் யோசிக்கிறது இல்ல..(யோசிச்சாலும் வராது ::)) ) எவ்ளோ நாள் இது துடிக்கும்னும் தெரியாது.. துடிக்கிற வரை இந்த கொடுமை தொடரும்..:((
அப்புறம் பேர் கேட்டீங்கல்ல இந்த லிங்க் பாருங்க ரெண்டாவது படத்துல ரெண்டாவது நான்.. (முதல்ல இர்க்கோறது நம்ம எறும்பார்..) அந்த லின்க்லையே என் பெரும் இருக்குது ::))
http://cablesankar.blogspot.com/2009/12/blog-post_13.html
Chitra said...
//இன்று வருவாளென்று
இன்று வருவாளென்று
இமைகளை
திறந்து கொண்டிருக்கிறேன் ..............இந்த காத்திருப்பு Bay watch அழகிக்கா?
இருக்கலாம் ....:))
...... கவிதை(கள்) நல்லா இருக்குங்க//
நன்றி மேடம்...:))
//றமேஸ்-Ramesh said...
கடற்கரை சிறுசுகளில்
உங்கள் மனது
கரைமோதும் அலைகள்
காயப்படுத்திய அந்த
கனவுகள்
கலையாமல்
இன்னமின்னும்
கவிதை வர
வாழ்த்துக்கள்//
புல்லரிக்குதுங்க... நண்பன் வலிக்காக கவி எழுதிய வள்ளல் எனக்கும் தந்தது ஒரு விள்ளல்.. :)) ரொம்ப நன்றி
றமேஸ்.
கமலேஷ் said...
ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு தோழரே...
(ஆனால் இந்த பீச் பக்கமெல்லாம் அதிகமா போகாதிங்க...)
போனால் வர கவிதை செலக்ட் பன்ற போட்டோ எல்லாம் இப்படிதான் இருக்கும்...//
கரெக்ட்ங்க ஒடம்புக்கு வயசானாலும் மனசு இன்னும் இளமையா இருக்குற வினை... நல்ல கருத்துக்கு நன்றி...:))
// ஜெட்லி said...
இன்னும் பே வாட்ச் மயக்கம் போலையா....//
ஹி.. ஹி.. ::))
// ஜெட்லி said...
இன்னும் பே வாட்ச் மயக்கம் போலையா....//
ஹி.. ஹி.. ::))
ஐயோ பேவாட்ச் ஞாபகத்த கிளப்பி விட்டுட்டீங்களே
செகண்ட் பார்ட் வருமா ?
கவிதை அழகு
விஜய்
//கவிதை(கள்) said...
ஐயோ பேவாட்ச் ஞாபகத்த கிளப்பி விட்டுட்டீங்களே
செகண்ட் பார்ட் வருமா ?
கவிதை அழகு
விஜய்///
பல்லுபோனாலும் DVD இருக்கும் சார் ::))) நன்றி::))
கவிதை நல்லா இருக்குங்க
சே.குமார் said...
கவிதை நல்லா இருக்குங்க//
//நேற்று முதல் காற்றைக்
காணவில்லை..!
வீழ்ந்து கிடந்தது
வெட்டப்பட்ட மரம்..!//
//எதிர்ப்பின்றி
பேசி சிரித்தோம்...
எதிர் எதிரே
நம் கல்லறைகள்..!//
உங்களோட இந்த சின்ன சின்ன கவிதைகள் மிகவும் அருமை நண்பரே... உண்மையில் சின்ன சின்ன வைரங்களாகவே பார்க்கிறேன்.. சிறப்பா எழுத வாழ்த்துக்கள்.
//நெஞ்சில்
ரணமிருக்கும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும்
நித்தமும் உனைக்கான
ரணத்தில் குருதி வழியும்
நினைவுகள் அதை வருடும்
கனவுகள் அதை வளர்க்கும் //
கவிதை அருமை....
ரசிதேன்ன்ன்னன்ன்ன்ன்....
seemangani //
நன்றி நண்பரே...:))
Post a Comment