அரங்கேற்றம் படம் நீயும் நானும்
அருகருகில் அமர்ந்து பார்த்த அரங்கு
விரல் கூட தீண்டாத நம் காதலுக்கு
இன்னும் மௌன சாட்சியாய்
நம்மை தெரிந்த மரங்கள்
விரும்பி பிரிந்த புல்லா அவென்யுவில்
எப்படி இருக்கிறீர்கள் என்று கேட்பதாய்
ஒவ்வொருமுறை சுற்றும்போதும்
என் உலகம் திரும்பி சுற்றும்
நீயும் நானும் சேர்ந்த பின் பிரிந்து
நடந்த நீண்ட நடைகள் ஏனோ
எனக்கு நினைவில் வரும்..
கூடவே எப்போதும் நானுன்முன்
காணமாட்டேன் என்ற என் சத்தியமும்..
இருந்தாலும்
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.
25 comments:
உங்கள் எழுத்துக்கள் பல அர்த்தங்களை தருகிறது.... அல்லது எனக்கு தான் புரியவில்லையா?
அந்த மரத்துக்கு காதலிக்கத் தெரியுது
இவள் மனம் மரமாகவே இருக்குது
இவன் பாழ்பட்ட மனதுடன்
காதல் செய்கிறான்....
///கூடவே எப்போதும் நானுன்முன்
காணமாட்டேன் என்ற என் சத்தியமும்..
இருந்தாலும்
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.///
பிடிச்சிருக்கு இந்த வலி
//விரல் கூட தீண்டாத நம் காதலுக்கு//
//மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது//
equations புரியுதா கவிஞரே!
வரிகள் அருமை,முதல் ஐந்து வரிகளில் சொக்கிப்போகிறேன், என் சொந்த அனுபவமும் கூட,
அருமை.
பிடிச்சிருக்கு.
என் நடை பாதையில்(ராம்) said...
உங்கள் எழுத்துக்கள் பல அர்த்தங்களை தருகிறது.... அல்லது எனக்கு தான் புரியவில்லையா//
தந்தால் என்ன ராம்..?? காதல் ஒன்றுதான் பார்வை வேறு ...::))
தந்தால் என்ன ராம்..?? காதல் ஒன்றுதான் பார்வை வேறு ...::))
இது என் எனக்கு நடந்தது அமைந்தகரை புல்லா AVENUE சுட்ரும்போதேல்லாம் இது தோன்றும்.. அனுபவம்... உங்களது வேறாய் காட்டும்..
றமேஸ்-Ramesh said...
அந்த மரத்துக்கு காதலிக்கத் தெரியுது
இவள் மனம் மரமாகவே இருக்குது
இவன் பாழ்பட்ட மனதுடன்
காதல் செய்கிறான்....
///கூடவே எப்போதும் நானுன்முன்
காணமாட்டேன் என்ற என் சத்தியமும்..
இருந்தாலும்
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.///
பிடிச்சிருக்கு இந்த வலி>>>
வலிதான் றமேஸ்... நன்றி ..::))
D.R.Ashok said...
//விரல் கூட தீண்டாத நம் காதலுக்கு//
//மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது//
equations புரியுதா கவிஞரே!//
இது கற்பனையே அல்ல அஷோக் ஜி... நடந்தது ::(( மௌனமாய் செய்தி இன்றைக்கும் சொல்லும் அந்த இடம்.:))
ஜெரி ஈசானந்தா. said...
வரிகள் அருமை,முதல் ஐந்து வரிகளில் சொக்கிப்போகிறேன், என் சொந்த அனுபவமும் கூட//
அதே அதே .... பாருங்க நமக்குள்ள எவ்ளோ நெருக்கம்..:))
சே.குமார் said...
அருமை.
பிடிச்சிருக்கு.//
வாங்க குமார் இன்றைக்குத்தான் உங்கள் நெடுங்கவிதைகள் படித்தேன் ...அருமை. ::))
வலி சொல்லும் வரிகள் அருமை...........
நல்லா இருக்கு,காதலின் வலி தெரிகிறது.
கலக்கல் கவிதை பாஸ்
நல்லாயிருக்கு நண்பரே!
காதல் பிரிவின் வலியும் ஒரு நல்ல உணர்வே. ஒருவேளை அந்த காதலில் வெற்றி பெற்றிருந்தால், இந்த இடத்தை கடக்கும்போது வழமை போல் தோன்றலாம். ஆனால் இப்போது... ஒவ்வொரு முறையும் உங்கள் காதல் அங்கு பூத்து கொண்டு தான் இருக்கிறது.
///இன்னும் மௌன சாட்சியாய்
நம்மை தெரிந்த மரங்கள்///
///மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.///
அருமை.
கவிதையில் இழையோடும் வலி உணரமுடிகிறது
சிலாகித்து எழுதியது போல் ஒரு உணர்வு...கவிதை நல்ல இருக்கு...பாலா...வாழ்த்துக்கள்...
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.
இந்த வரி சொல்லி விடுகிறது மொத்த மனசின் பாடுகளையும்..நைஸ்
நிலாமதி said...
வலி சொல்லும் வரிகள் அருமை...........//
வாங்க நிலாமதி.. நன்றி.:)
சைவகொத்துப்பரோட்டா said...
நல்லா இருக்கு,காதலின் வலி தெரிகிறது//
நன்றி நண்பரே :))
கவிதை காதலன் said...
கலக்கல் கவிதை பாஸ்//
வாங்க நண்பரே .. பேரே சூப்பரா இருக்கு ..:)
ரோஸ்விக் said...
நல்லாயிருக்கு நண்பரே!
காதல் பிரிவின் வலியும் ஒரு நல்ல உணர்வே. ஒருவேளை அந்த காதலில் வெற்றி பெற்றிருந்தால், இந்த இடத்தை கடக்கும்போது வழமை போல் தோன்றலாம். ஆனால் இப்போது... ஒவ்வொரு முறையும் உங்கள் காதல் அங்கு பூத்து கொண்டு தான் இருக்கிறது//
வாங்க நண்பரே .. மிக்க நன்றி..
ஒருவேளை ...???
இருக்கலாம்..!!.. ::)) .:)
S.A. நவாஸுதீன் said...
///இன்னும் மௌன சாட்சியாய்
நம்மை தெரிந்த மரங்கள்///
///மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.///
அருமை.
கவிதையில் இழையோடும் வலி உணரமுடிகிறது//
நன்றி நவாஸ் சில இடங்கள் நம்மை விடாது ...:))
seemangani said...
சிலாகித்து எழுதியது போல் ஒரு உணர்வு...கவிதை நல்ல இருக்கு...பாலா...வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி கனி... :))
seemangani said...
சிலாகித்து எழுதியது போல் ஒரு உணர்வு...கவிதை நல்ல இருக்கு...பாலா...வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி கனி... :))
ரிஷபன் said...
மரம் கேட்டதை நீ கேட்டதாகவே
எண்ணிக்கொள்ளும் மனது.
இந்த வரி சொல்லி விடுகிறது மொத்த மனசின் பாடுகளையும்..நைஸ்//
வாங்க ரிஷபன் ... நன்றி..:))
Post a Comment