பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள் ..

சின்ன சின்ன கவிதைகள் ..

பகலிலேயே
கடத்துகிறாய்
பார்வையால்
போதையை
கண்டுபிடிக்கத்தான்
யாருமில்லை..

----------------------------------------------------------------------------------

கவலை மறக்க
கள் குடித்த 
மனது 
அதை மறைக்க 
கவலை குடித்தது  

 ----------------------------------------------------------------------------------

காக்கை குருவி 
எங்கள் ஜாதி 
பசித்தால் 
களவு செய் 
என்பதே நீதி... 

----------------------------------------------------------------------------------

குற்றமுண்டு 
குறைகளுண்டு 
ஏதுமறியா நடத்தையுண்டு 
ஆயினும் மனவண்டு 
சுற்றியே வருகுது 
உனைக்கண்டு.. 

----------------------------------------------------------------------------------

தினசரிகளாய்
வாழ்க்கை
வாசனையாய்
திறந்து, அவசரமாய் படித்து 
கடைசி பக்கம் முடிந்ததும் 
எங்கெங்கோ சிக்கி 
மறு சுழற்ச்சியில் 
மீண்டும்
வாசனையாய் பிறந்து...

----------------------------------------------------------------------------------

உன் விழிகொண்டு நீ 
எரிக்கும் பார்வையில் 
நீ உண்டு நானில்லை...

----------------------------------------------------------------------------------

உறைந்திருக்கும் 
நீர்படிமங்களின் இளகிய 
மனது கங்கையாய்
வந்தது பாவ ஜீவன்களை 
காக்க...

----------------------------------------------------------------------------------

தேசத்தந்தையை 
போலி என்றவனை
நல்லவனாக்கி 
உண்மை என்றவனை  
கெட்டவனாகும் 
விசித்திர ரூபாய்கள்  

----------------------------------------------------------------------------------

நண்பனோ 
எதிரியோ 
உயிரின்
உபத்திரவங்கள் 
ஏதும் செய்யாத    
சவங்கள்
எப்போதும் 
சாதுவாய் 
எனக்குத்தோன்றும்..

----------------------------------------------------------------------------------

22 comments:

பூங்குன்றன்.வே said...

எந்த கவிதை அருமை என்று சொல்ல? ஒவ்வொரு குட்டிக்கவிதையும் கொள்ளை அழகு நண்பா.

எறும்பு said...

பொதுவா நமக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்.. உங்க கவிதை எல்லாம் படிச்சாலும், கமெண்ட் போட்டதில்லை.. ஆனா இந்த சின்ன சின்ன கவிதைகள்அருமை

Ramesh said...

///உன் விழிகொண்டு நீ
எரிக்கும் பார்வையில்
நீ உண்டு நானில்லை...///

அருமை...
நீங்கள்
மாது கண்டு
மது கொண்டு..

பலா...பட்டறையில்
பல பல
பழங்"கள்"
அருந்ததச்சொல்கிறீர்கள்
நாங்களும் கள்ளுற்றோம்

க.பாலாசி said...

//கவலை மறக்க
கள் குடித்த
மனது
அதை மறைக்க
கவலை குடித்தது//

//தேசத்தந்தையை போலி என்றவனைநல்லவனாக்கி உண்மை என்றவனை கெட்டவனாகும் விசித்திர ரூபாய்கள் //

இரண்டும் மிக அருமையான கவிதைகள்....

என் நடை பாதையில்(ராம்) said...

எல்லாருக்கும் புரியும் எளிய வார்த்தைகளைக் கொண்டே கலக்குகிறீர்கள்....

Vidhoosh said...

///நண்பனோ
எதிரியோ
உயிரின்
உபத்திரவங்கள்
ஏதும் செய்யாத
சவங்கள்
எப்போதும்
சாதுவாய்
எனக்குத்தோன்றும்..//

கொஞ்சம் திடுக்கென்று இருந்தது.

எல்லாமே நல்லாருக்கு.

அந்த படத்தில் உள்ள கண்ணின் அழகை மேக் அப் கெடுக்கிறது இல்ல?

--வித்யா

தமிழ் said...

//கவலை மறக்க
கள் குடித்த
மனது
அதை மறைக்க
கவலை குடித்தது//

அருமை

பின்னோக்கி said...

முதல் வாசிப்பிலேயே படித்து புரிந்துகொள்ளக் கூடிய கவிதைகள்.

போதை,ண்டு கவிதைகள் டாப்.

Paleo God said...

பூங்குன்றன்.வே said...
எந்த கவிதை அருமை என்று சொல்ல? ஒவ்வொரு குட்டிக்கவிதையும் கொள்ளை அழகு நண்பா//

நன்றி நண்பா...::)

Paleo God said...

ராஜகோபால் (எறும்பு) said...
பொதுவா நமக்கும் கவிதைக்கும் கொஞ்சம் தூரம் அதிகம்.. உங்க கவிதை எல்லாம் படிச்சாலும், கமெண்ட் போட்டதில்லை.. ஆனா இந்த சின்ன சின்ன கவிதைகள்அருமை//

வாங்க RG ரொம்ப சந்தோஷம்..:))

Paleo God said...

றமேஸ்-Ramesh said...

பலா...பட்டறையில்
பல பல
பழங்"கள்"
அருந்ததச்சொல்கிறீர்கள்
நாங்களும் கள்ளுற்றோம்//

நன்றி நண்பரே...::))

Paleo God said...

க.பாலாசி said...
//கவலை மறக்க
கள் குடித்த
மனது
அதை மறைக்க
கவலை குடித்தது//

//தேசத்தந்தையை போலி என்றவனைநல்லவனாக்கி உண்மை என்றவனை கெட்டவனாகும் விசித்திர ரூபாய்கள் //

இரண்டும் மிக அருமையான கவிதைகள்...//

நன்றி நண்பரே...::))

Paleo God said...

என் நடை பாதையில்(ராம்) said...
எல்லாருக்கும் புரியும் எளிய வார்த்தைகளைக் கொண்டே கலக்குகிறீர்கள்...//

நன்றி ராம்::))

Paleo God said...

Vidhoosh said...
///நண்பனோ
எதிரியோ
உயிரின்
உபத்திரவங்கள்
ஏதும் செய்யாத
சவங்கள்
எப்போதும்
சாதுவாய்
எனக்குத்தோன்றும்..//

கொஞ்சம் திடுக்கென்று இருந்தது.

எல்லாமே நல்லாருக்கு.

அந்த படத்தில் உள்ள கண்ணின் அழகை மேக் அப் கெடுக்கிறது இல்ல?

--வித்யா//

CORRECT மேடம்... ::)) நான் எதிர்பார்த்த படம் கிடைக்கவில்லை :((

சீமான்கனி said...

//உன் விழிகொண்டு நீ
எரிக்கும் பார்வையில்
நீ உண்டு நானில்லை...//
ரசித்தேன்...

ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லாம் அருமை நண்பா வாழ்த்துகள்....

அண்ணாமலையான் said...

பலா பட்டய கெளப்புறீங்க...

சிவாஜி சங்கர் said...

Wooooow... Supper :)

creativemani said...

முதலும் கடைசியும் கலக்கல்..

Paleo God said...

seemangani said...
//உன் விழிகொண்டு நீ
எரிக்கும் பார்வையில்
நீ உண்டு நானில்லை...//
ரசித்தேன்...

ஒவ்வொன்றும் ஒரு விதம் எல்லாம் அருமை நண்பா வாழ்த்துகள்...//
நன்றி கனி ... ::))

Paleo God said...

அண்ணாமலையான் said...
பலா பட்டய கெளப்புறீங்க..//

சார் உங்கள விடவா... வயித்து வலி மாத்திரையோட ரெடியா இருக்கேன்..::)

Paleo God said...

Sivaji Sankar said...
Wooooow... Supper :)//

Thank you Sir.:))

Paleo God said...

அன்புடன்-மணிகண்டன் said...
முதலும் கடைசியும் கலக்கல்.//

வாங்க மணிகண்டன் ::)) மிக்க நன்றி.