இயற்கையின் உறவுகள்
மனிதனுக்கு புரிவதே இல்லை
பல முறை
பயன்களாய்
பயங்களாய்
எப்படியெல்லாமோ
அதனதன் வடிவில்
நமக்கு செய்தி
சொன்னாலும்...
இயற்கையின் உறவுகள்
மனிதனுக்கு புரிவதே இல்லை
எல்லாவற்றிற்கும்
விலை வைத்து
மற்ற உயிர்களை
பணயம் வைத்து
தன்னைப்போல
சுயநல உயிரியை
அண்டவெளி எங்கும்
தேடி அலையும்
காய்ந்தால் முளைக்காத
ஈர விதை கொண்ட
மனிதனுக்கு
புரிவதே இல்லை
இயற்கையின்
இலவசமான
உறவுகள்..!
யூத் புல் விகடனில் வெளிவந்த எனது கவிதை.
13 comments:
மிகவும் அழகான வரிகள்...
என் வாழ்த்துக்கள்...
நல்லாயிருக்குங்க
//எல்லாவற்றிற்கும்
விலை வைத்து
மற்ற உயிர்களை
பணயம் வைத்து//
உண்மைதான். நல்ல கவிதை பலாபட்டறை.
//காய்ந்தால் முளைக்காத
ஈர விதை கொண்ட
மனிதனுக்கு
புரிவதே இல்லை
இயற்கையின்
இலவசமான
உறவுகள்..!///
உங்களுடன் உறவாட வைக்குதுங்க கவிதை.... வாழ்த்துக்கள்
//காய்ந்தால் முளைக்காத
ஈர விதை கொண்ட
மனிதனுக்கு
புரிவதே இல்லை
இயற்கையின்
இலவசமான
உறவுகள்..!//
ஆழமான அழகான கவிதை .....வாழ்த்துகள்....
//காய்ந்தால் முளைக்காத
ஈர விதை கொண்ட
மனிதனுக்கு
புரிவதே இல்லை
இயற்கையின்
இலவசமான
உறவுகள்..!//
நல்லா எழுதுறீங்க பலா பட்டறை
fantastic
அழகான வரிகள்
வாழ்த்துகள்
வாழ்த்துகள் பலா பட்டறை!
அருமையான கவிதை.
///தன்னைப்போல
சுயநல உயிரியை
அண்டவெளி எங்கும்
தேடி அலையும்
காய்ந்தால் முளைக்காத
ஈர விதை கொண்ட
மனிதனுக்கு
புரிவதே இல்லை///
அருமை அருமை
மிக்க நன்றி :::))))))))))
kamalesh
D.R.Ashok
ராமலக்ஷ்மி
றமேஸ்
seemangani
thenammailakshmanan
திகழ்
ஷங்கி
S.A. நவாஸுதீன்
&
யூத்புல் விகடன் :)
நன்று.
வயிற்றுக்கு சோறிடல் வேண்டும்.
வாங்கி வந்து படித்துக் கொண்டு இருக்கும் இந்த கவிதை பாடம் போல சொல்கின்றது.
எல்லோருக்கும் புரியுத்தான் செய்யும்.
ஆனால் நுகர்வு கலாச்சாரம் என்ற புலிவாலை அல்லவா பிடித்துக் கொண்டு ஓடுகின்றோம்.
பார்க்கலாம் கடைசியில் புலியின் வாயிலா? புகலிடம் தேடுவதா என்பதை நாம் இருந்து பார்க்கப்போவதில்லை.
பலாபட்டறை நல்ல கவிதை, வாழ்த்துகள்.
Post a Comment