பலா பட்டறை: மைக்கல் ஜாக்சனும்-ஞானும்

மைக்கல் ஜாக்சனும்-ஞானும்வித்யா அவர்களின் பக்கத்தில் ஒரு ஆங்கில பதிவுக்கு பின்னூட்டமிடும்போது நண்பர் அ.மு.செய்யது மைகேல் ஜாக்சனை (என்னை மாதிரியே) உன்னிப்பாய் கவனித்து black or white பாடலை திரும்ப பார்க்க வைத்து விட்டார்..:)) வித்யா அவர்களுக்கும் பிடித்த பாடல் என்பது எனக்கொன்றும் ஆச்சரியமளிக்கவில்லை. 1990 களில் மைகேல் ஜாக்சன் பாடல்கள் எனக்கு அறிமுகமான சமயம் (நானெல்லாம் பஞ்சாயத்து யூனியன் ஸ்கூலுங்கோ-தானா பாட்டு கேட்டு பிடிச்சது) மும்பையில் அவரின் கச்சேரி (??) பார்க்க போன பாக்கியம் பெற்றேன்.

அந்தேரி பக்கம் ஒரு விளையாட்டு மைதானத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள்..1500 ருபாய் டிக்கெட் (இருக்கறதிலேயே கம்மி இதுதானுங்கோ ) ஏகப்பட்ட கெடுபிடி மைதானத்தை சுற்றிலும். மொத்த மும்பையின் ஜொலி ஜொலிப்பையும் ஒரு சேர கண்ட நாள் அது. மேடைக்கும் நாங்கள் இருந்ததுக்கும் நல்ல தூரம் இருந்தது. கருப்பு நிறத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. யாரோ ஒரு ஹிந்தி நடிகை அப்போதைய ஹிட் பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடிக்கொண்டிருந்தார். சவுண்ட் சிஸ்டம் படு கேவலம்...

அவ்வளவுதானா 1500 அம்பேல்தான் போல என்று நினைத்தபோது ஹிந்தி பாடல் நிறைவு பெற்றது.. மெதுவாய் மேடையை பார்த்துக்கொண்டிருந்தோம்.

டொம்... எங்காவது சப்த்தம் நேராய் நெஞ்சில் அறைந்து உணர்ந்திருக்கிறீர்களா ?? அன்று உணர்ந்தேன்... டொம்..நடு நெஞ்சில் அறைந்த சப்த்தம். அப்போது தான் தெரிந்தது இனிமேதான் கச்சேரி என்று. ஆளுயர திரைகள் வெளிச்சத்தில் தங்க உடையில் புகைகளுக்கு நடுவே ..MJ...ஆடிய அதிரடியில் சுமார் 45 நிமிடங்கள் அங்கே என்ன நடந்ததென்று யாருக்கும் தெரியாது.... வேகமென்றால் ஒரு வேகம்.

 அப்படி ஒரு LIVE   நிகழ்ச்சி பிசிறில்லாமல் மேடையில் நடத்த யாராலும் முடியாது.


10 comments: