பலா பட்டறை: சின்ன சின்ன கவிதைகள்.

சின்ன சின்ன கவிதைகள்.




மறதியின் பிறப்பிலிருந்து 
ஆரம்பிக்கிறது 
துக்கத்தின் இறப்புகள்




உயிர்வாழ தின்ற 
பண்டம் 
மண்ணில் வந்ததோ 
தீயில் செய்ததோ 
இரண்டுமே காத்திருக்கிறது 
இறந்ததும் 
நம்மை தின்ன....  



ஒருத்தருமில்லா 
தீவிற்கு 
ஓடிப்போகவேனும்  
நீயும் நானுமாய் 
தேடிச்சிலர் 
வந்திடினும் 
நாடகம் நடத்திடுவோம் 
நாமங்கு இல்லையென்று 
ஒரு நாளேனும் 
ஒருத்தருமில்லா 
தீவிற்கு 
ஓடிப்போகவேனும் 
நீயும் நானுமாய். 



15 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

//ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்
தேடிச்சிலர்
வந்திடினும்
நாடகம் நடத்திடுவோம்
நாமங்கு இல்லையென்று
ஒரு நாளேனும்
ஒருத்தருமில்லா
தீவிற்கு
ஓடிப்போகவேனும்
நீயும் நானுமாய்.
//

இந்த வரிகள் ரொம்ப பிடித்தது...!

Paleo God said...

வாங்க வசந்த் நன்றி.. :-).

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

Covairafi said...

மறதி என்ற நோய் இல்லையெனில், நாம் மனிதராய் தொடர்ந்திருப்போமா ? துக்கம் என்னும் நோய் தீர்க்க சந்தோசம் என்ற அருமருந்து இல்லாவிடின், யாருமில்லா தீவை நாடியிருப்போமா ? கவித. சும்மா பட்டறைய தூள் கிளப்புதுங்கோ

Paleo God said...

//மறதி என்ற நோய் இல்லையெனில், நாம் மனிதராய் தொடர்ந்திருப்போமா ? துக்கம் என்னும் நோய் தீர்க்க சந்தோசம் என்ற அருமருந்து இல்லாவிடின், யாருமில்லா தீவை நாடியிருப்போமா ? கவித. சும்மா பட்டறைய தூள் கிளப்புதுங்கோ //

வாங்க rafi நன்றி :-))

aazhimazhai said...

மறதியின் பிறப்பிலிருந்து
ஆரம்பிக்கிறது
துக்கத்தின் இறப்புகள் !!!

உண்மை !!!! நல்லா இருக்கு !!!! சுருங்க விளங்க சொன்னீர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நல்லா இருக்கு

Paleo God said...

வாங்க aazhimazhai நன்றி.. :-)

Paleo God said...

@ T.V.Radhakrishnan

வாங்க சார், :-) வாழ்த்துக்கு நன்றி.

அண்ணாமலையான் said...

நல்லாருக்குங்க...

Paleo God said...

// அண்ணாமலையான் said...
நல்லாருக்குங்க...//

நன்றி நண்பரே :-))

சீமான்கனி said...

//உயிர்வாழ தின்ற
பண்டம்
மண்ணில் வந்ததோ
தீயில் செய்ததோ
இரண்டுமே காத்திருக்கிறது
இறந்ததும்
நம்மை தின்ன....//

அடடா...அசத்தல்....அத்தனையும் அருமை வாழ்த்துகள்..

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

நல்லா இருக்குங்க!

ரிஷபன் said...

இல்லையென்று ஒரு நாளேனும்

இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு போல..

Paleo God said...

வாங்க நெல்லை எஸ்.ஏ.சரவணக்குமார் நன்றி நண்பரே.

வாங்க ரிஷபன்... ஆசை யாரை விட்டது...அதுவும் நம்மை போல மனிதர்களுக்கு தனிமை இனிமைதானே :))))

நன்றி seemangani :)))