உயிர் சங்கிலி..
பிறப்பும் இறப்புமான
சங்கிலித்தொடர்களில்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமான
வளையங்களின் அழுத்தங்களில்
தேய்மானங்களை பற்றி
கவலைபடாமல்
உயிரின் சுழற்சி
இலக்கில்லாமல் ஆடிக்கொண்டேதான்
இருக்கிறது
ஒரு முனையும், மறு முனையும்
ஒன்றேதான் என்றபோதும்
விலகியுள்ள வளையங்களின் உராய்வுகள்
பிழம்புகளை கக்கி
உன் வளையம் என் வளையம்
என உடைக்கத்திமிறும்
நர மிருகங்களின் ஓலங்கள்
உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது..
Labels:
பட்டறை கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
மிகவும் ரசித்தேன் :)
நல்லா இருக்குதே
உயிர்ச்சங்கில் நன்றாக உள்ளது
வாழ்க்கை பூச்சியம் என்பதை மறந்து...
// நர மிருகங்களின் ஓலங்கள்
உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது.. //
அண்ணே நெத்தியடி..
நன்றாக இருந்தது .
அழகிய நடை .நல்ல படிமக் கவிதை படித்த உணர்வு ...
வாழ்த்துக்கள்
வாழ்க்கை விளக்கம் சங்கிலி வளையத்தில்
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்ப நல்லாருக்கு...
//உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது..//
உண்மைதான் பலா பட்டறை அருமையாய் இருக்கு
//உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது..//
உணர முடிவதில்லை....அருமை பாலா வாழ்த்துகள்...
D.R.Ashok said...
மிகவும் ரசித்தேன் :)//
எல்லா பின்னூட்டத்தையும் புன்னகையால.தாக்கறீங்களே மௌன விரதமோன்னு நினச்சேன்... :)) நன்றி.
றமேஸ்-Ramesh said...
நல்லா இருக்குதே
உயிர்ச்சங்கில் நன்றாக உள்ளது
வாழ்க்கை பூச்சியம் என்பதை மறந்து..//
உயிர்ச்சங்கில் நிரம்பியுள்ளது வாழ்க்கை பூச்சியம்.. அடேங்கப்பா... நாலு வார்த்தையில ஊதிட்டீங்க.... நன்றி::))
இராகவன் நைஜிரியா said...
// நர மிருகங்களின் ஓலங்கள்
உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது.. //
அண்ணே நெத்தியடி..//
வாழ்த்துக்கு நன்றிண்ணே.... (அட என்ன போய் அண்ணன்ன்னு)::))
நினைவுகளுடன் -நிகே- said...
நன்றாக இருந்தது .
அழகிய நடை .நல்ல படிமக் கவிதை படித்த உணர்வு ...
வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி..நிகே::))
கவிதை(கள்) said...
வாழ்க்கை விளக்கம் சங்கிலி வளையத்தில்
வாழ்த்துக்கள்
விஜய்//
வாழ்த்துக்கு நன்றி விஜய்..::))
கலகலப்ரியா said...
ரொம்ப நல்லாருக்கு.
வாங்க ப்ரியா நன்றி ::) தொடர் வாழ்த்துகளுக்கு :))
thenammailakshmanan said...
//உணர்வதில்லை
ஒரு முனையும்
மறு முனையும்
ஒன்றேதான் என்பது..//
உண்மைதான் பலா பட்டறை அருமையாய் இருக்கு//
வாங்க தேனம்மைலக்ஷ்மணன்.. நன்றி வருகைக்கும் பாராட்டுக்கும்..
//பிறப்பும் இறப்புமான
சங்கிலித்தொடர்களில்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமான
வளையங்களின் அழுத்தங்களில்
தேய்மானங்களை பற்றி
கவலைபடாமல்
உயிரின் சுழற்சி
இலக்கில்லாமல் ஆடிக்கொண்டேதான்
இருக்கிறது//
நல்ல சிந்தனை நன்பரே
// U.P.Tharsan said...
//பிறப்பும் இறப்புமான
சங்கிலித்தொடர்களில்
சிரித்துக்கொண்டும்
அழுதுகொண்டுமான
வளையங்களின் அழுத்தங்களில்
தேய்மானங்களை பற்றி
கவலைபடாமல்
உயிரின் சுழற்சி
இலக்கில்லாமல் ஆடிக்கொண்டேதான்
இருக்கிறது//
நல்ல சிந்தனை நன்பரே//
நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும்...::))
Post a Comment