பலா பட்டறை: ஈர வெப்பம்

ஈர வெப்பம்




















நெஞ்சினில் சாய்த்து
தட்டி தட்டி
தூங்க வைத்த
பின் உனக்கு
குளிருமே எனப் போர்வை
தேடிய எனக்கும்
குளிர்கிறதென்பது
உனக்கும் தெரிந்ததை
உணர்த்தியது நீ என்
மீது பெய்த சிறுநீரின்
வெப்பம்..













மூடிக்கிடந்தாலும்
சுயத்தினை வெட்டிச்சாய்க்கும்
திரட்ச்சிகளின் மையல்
எப்போதும் திறந்தே கிடக்கிறது
ஈர விதை கிடங்குகள் வாசல்



மடிப்புகளினிடையில்
மனது விழுந்து
மடிந்தது
புத்தகத்தை மடித்த வாழ்வு..



23 comments:

அண்ணாமலையான் said...

படங்களும் சேர்ந்தே அழகு...

ப்ரியமுடன் வசந்த் said...

மிகச்சிறப்பான எழுத்தாளுமை

நான்கு வரிகளில் திருப்பங்களை வைத்து முடிவில் ஏமாற்றும் வித்தையா?

எப்படியோ வழக்கம்போல்ல் அல்லாத வித்யாசம்

கீப் இட் அப்....!

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதைகள்..படங்களும்.

Ramesh said...

மிகப் பிரமாதம்... எப்படீங்க இப்படியெல்லாம்...
மிக ரசனையாக உள்ளது

பூங்குன்றன்.வே said...

இங்கேங்க புடிக்கிறீங்க கருவை? எனக்கு சிக்க மாட்டேங்குதே (ஆமா..அப்படியே சிக்கிட்டாலும்) :)

கவிதை காதலனா நீ? இல்ல கவிதையின் காதலனா நீ?

இப்ப போட்டியே உனக்கும்,எனக்கும் தான் நண்பா..

அதாவது ஆரோக்கிய கவிதைபோட்டி !!!

சீமான்கனி said...

//நெஞ்சினில் சாய்த்து

தட்டி தட்டி

தூங்க வைத்த

பின் உனக்கு

குளிருமே எனப் போர்வை

தேடிய எனக்கும்

குளிர்கிறதென்பது

உனக்கும் தெரிந்ததை

உணர்த்தியது நீ என்

மீது பெய்த சிறுநீரின்

வெப்பம்..//

அழகு...

Paleo God said...

// அண்ணாமலையான் said...
படங்களும் சேர்ந்தே அழகு..//

வாங்க மல... நேத்து உங்க பதிவ பாத்துட்டு :)))) கலக்குங்க ... மிக்க நன்றி வந்ததுக்கும் வாழ்த்துக்கும்..

Paleo God said...

//பிரியமுடன்...வசந்த் said...
மிகச்சிறப்பான எழுத்தாளுமை//

நிஜமாவா !!!!???? :o

//நான்கு வரிகளில் திருப்பங்களை வைத்து முடிவில் ஏமாற்றும் வித்தையா?//

ஹிஹி.. பாயிண்ட புடிச்சிட்டீங்க..


எப்படியோ வழக்கம்போல்ல் அல்லாத வித்யாசம்
கீப் இட் அப்....//

மிக்க நன்றி வசந்த் பிரியமுடன்:))

Paleo God said...

// பா.ராஜாராம் said...
மிக அருமையான கவிதைகள்..படங்களும்.//

வாங்கண்ணே.. வந்ததுக்கு, வாழ்த்துக்கு ரொம்ப சந்தோஷம்.. ::))

Paleo God said...

// றமேஸ்-Ramesh said...
மிகப் பிரமாதம்... எப்படீங்க இப்படியெல்லாம்...
மிக ரசனையாக உள்ளது//

வாங்க றமேஸ் மிக்க நன்றி தொடர் வருகைக்கும் வாழ்த்துக்கும்..::)

Paleo God said...

//பூங்குன்றன்.வே said...
இங்கேங்க புடிக்கிறீங்க கருவை? எனக்கு சிக்க மாட்டேங்குதே //

வாங்க பூ.. நான் எங்க புடிக்கிறேன்... :(( அதுவா சிக்குது அதுதான் ஆச்சரியம்..

கவிதை காதலன் தான் சரி ::)) கவிதையின் காதலன் ... ஹு..ஹும் டூ மச்... ::))

//இப்ப போட்டியே உனக்கும்,எனக்கும் தான் நண்பா..அதாவது ஆரோக்கிய கவிதைபோட்டி !!! //

ரைட்டு :)))))

Paleo God said...

@ seemangani

வாங்க நண்பரே மிக்க மகிழ்ச்சி..:))

கமலேஷ் said...

ஈர வெப்பம் மிக அழகு...
திறந்து கிடக்கும் விதைகள் கூட...
வாழ்த்துக்கள்... தல கலக்குங்க..

Vidhoosh said...

ம்..

ம்ம்..

ம்ம்ம்...

-வித்யா

Paleo God said...

// கமலேஷ் said...
ஈர வெப்பம் மிக அழகு...
திறந்து கிடக்கும் விதைகள் கூட...
வாழ்த்துக்கள்... தல கலக்குங்க..//

வாங்க தல... மிக்க நன்றி..:))

Paleo God said...

// Vidhoosh said...
ம்..

ம்ம்..

ம்ம்ம்...

-வித்யா//

நன்றி! மேடம்::))
( விடைத்தாள் திருத்தற டீச்சர் மாதிரியே மிரட்டரீங்களே..)

விஜய் said...

அட்டகாசம், அழகு

விஜய்

Paleo God said...

நன்றி விஜய்..:))

ரோஸ்விக் said...

ச்சும்மா கலக்குற கண்ணா! நல்ல இருக்கு.

aazhimazhai said...

கவிதையும் அருமை படங்களின் பொருத்தமும் அருமை

Paleo God said...

வாங்க ரோஸ்விக் நன்றி ..:))

வாங்க aazhimazhai நன்றி ..:))

ரிஷபன் said...

கொன்னுட்டீங்க.. முதல் கவிதைல.. ஆஹா.. மனசுல பதிஞ்சு போச்சு..

Paleo God said...

//கொன்னுட்டீங்க.. முதல் கவிதைல.. ஆஹா.. மனசுல பதிஞ்சு போச்சு..//

நிஜமாவா .... மனசு நிறைஞ்சு போச்சுங்க... நன்றி ரிஷபன்.:))