பலா பட்டறை: ஈர வெப்பம்

ஈர வெப்பம்
நெஞ்சினில் சாய்த்து
தட்டி தட்டி
தூங்க வைத்த
பின் உனக்கு
குளிருமே எனப் போர்வை
தேடிய எனக்கும்
குளிர்கிறதென்பது
உனக்கும் தெரிந்ததை
உணர்த்தியது நீ என்
மீது பெய்த சிறுநீரின்
வெப்பம்..

மூடிக்கிடந்தாலும்
சுயத்தினை வெட்டிச்சாய்க்கும்
திரட்ச்சிகளின் மையல்
எப்போதும் திறந்தே கிடக்கிறது
ஈர விதை கிடங்குகள் வாசல்மடிப்புகளினிடையில்
மனது விழுந்து
மடிந்தது
புத்தகத்தை மடித்த வாழ்வு..23 comments: