பலா பட்டறை: யாகாவாராயினும் நாகாக்க..

யாகாவாராயினும் நாகாக்க..







எனது முந்தைய பதிவான எங்களின் குடும்ப மருத்துவர் இல் சொன்னது போல 2009 ம் வருடத்திற்கான, இலவச முழு உடல் சிகிச்சை முகாம் லஸ் கார்னர் அருகிலுள்ள ஹோட்டல் சங்கீதாவில் 27-12-2009 ஞாயிறு அன்று நடைபெற்றது சரியாக காலை 4.45 க்கு துவங்கிய இந்த பரிசோதனைக்கு அவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெரும் 100 க்கும் அதிகமானவர்கள் உடல் பரிசோதனை செய்ய வந்திருந்தார்கள், நான் என் தாயாருடன் சென்றிருந்தேன்.


நிகழ்ச்சியின் முக்கிய விஷயங்கள் :: 


இந்த இலவச உடல் சோதனை முகாம் சிறிய அளவில் டாக்டருடைய கிளினிக்கில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ஒரு மண்டபத்தில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த  10 ஆவது ஆண்டில் வளர்ச்சி கண்டிருக்கிறது. தான் பரிந்துரைக்கும் மருந்து நிறுவனங்களின் துணையுடன் நவீன சிகிச்சை கருவிகளை கொண்டு மிக அத்தியாவசியமான உடல் பரிசோதனைகள் முக்கியமாக இருதயம் மற்றும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கான SCREENING TEST கள் செய்யப்பட்டது. 


01. சர்க்கரையின் 3 மாத விகிதங்களை காட்டும் :  HbA1C.
02. சர்க்கரையால் பாதிப்புக்குன்டாகும் பாதங்களின் தொடு   
      உணர்விற்கான : VIBRATORY THRESOLD READING / NEUROPATHY  
      SCREENING.
03. இருதயத்தின் நுண்ணிய சப்தங்களை பதிவிடும் PCG - PHONO-
      CARDIOGRAM.
04. எலும்பு அடர்த்தியை சொல்லும் BONE DENSITY REPORT.
05. ரத்தத்தின் க்ளுகோஸ் சொல்லும் (சாப்பாட்டிற்கு முன்பு ஒருமுறை / 
      பின்பு ஒருமுறை ) BLOOD GLUCOSE ANALYSIS. (CBG -  CAPILLARY BLOOD 
      GLUCOSE)
06. நுரை ஈரல்களின் செயல்திறன் அறியும் LFT - LUNG FUNCTION டெஸ்ட்.
07. 11 வகையான அளவுகளை சொல்லும் MICROALBUMINURIA TEST. இது 
      சிறுநீரில் உள்ள ALBUMIN அளவை காட்டுகிறது. சிறுநீரக செயல்பாடு 
      இதன் மூலமும் கண்டறியப்படுகிறது.
08. BMI BODY MASS INDEX எனப்படும் உடலின் அளவுக்கேட்ற்ற உடல் 
      கொழுப்பு கண்டறிதல்.
09. தைராயிடு சுரப்பிகளுக்கான பரிசோதனை. 


போன்றவைகள் செய்யப்பட்டன. மருத்துவ கேள்வி பதில் (QUIZ) போட்டியும் நடந்தது. சரியான பதில் சொல்லியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் 'உணவே மருந்து மருந்தே உணவு' என்ற தலைப்பில் ஒரு சிறிய பட்டிமன்றமும் நடந்தது. முதலில் நடக்கும் உணவிற்கு முன்பான ரத்த பரிசோதனைக்கு பிறகு முதலில் காபியும் பிறகு சுவையான சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பட்டிமன்றம் QUIZ போன்றவை காலையிலிருந்து காத்திருந்து பரிசோதனை செய்ய வந்த வயதானவர்களுக்கு நல்லதொரு பொழுது போக்காக நிறைய அறிவுபூர்வமான் மருத்துவ  விஷயங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்தது. 


கடைசியாக சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுக்குறிப்புகள், பொதுவான ஆரோக்கிய உணவிற்கான சந்தேகங்களை போக்கினார் ஒரு டயடிசியன்.   


மதியம் நல்ல சாப்பாட்டுடன் CAMP இனிதே நிறைவு பெற்றது. 


கருத்து பரிமாற்றத்தின் போது டாக்டர் கூறிய சில விஷயங்கள் திகைக்க வைத்தன::


தென் கிழக்கு ஆசியாவில் சர்க்கரை நோய் (அல்லது குறைபாடு) மிக அதிக அளவில் பரவுவதாக குறிப்பிட்டார்.


 வம்சா வழி என்பது போய் இப்போது குறைந்த பட்சம் 40 விழுக்காடு ஆபத்து சர்க்கரை வம்சாவழி இல்லாத மக்களுக்கு வர வாய்ப்பிருப்பதாகவும் SENSEX போல இந்த அளவுகள் மிக வேகமாக மாறிக்கொண்டிருப்பதாகவும் சொன்னபோது கொஞ்சம் 'திக்' கென்றுதான் இருந்தது.


முன்பெல்லாம் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு வந்தால் 60 சதவிகிதம் மற்றவர்களுக்கும் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்பட்டது இப்போது கண்டிப்பாக அனைவருக்கும் வரும் என்ற அளவில் வாழ்வியல் முறை மாறிவிட்டதாக கவலையுடன் குறிப்பிட்டார்.


 நல்ல உணவு, நடை பயிற்சி, உடற்பயிற்சி, தொடர்ந்த உடல் பரிசோதனைகள் போன்றவை மட்டுமே ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடுகளிலிருந்து (வேறு பலவற்றிலிருந்தும்) நம்மை காப்பற்றும் என்பதையும் கூறினார் (BP மற்றும் DIABETIC,etc ).


'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்பது போல நம்மை அறியாமல் நமது பழக்க வழக்கங்களினால் ஏற்படும் மேற்படி குறைபாடுகள், முதல் கட்ட அளவில் கண்டுபிடிக்கப்பட்டால் தொடர் சிகிச்சை மூலம் நலமான வாழ்வு வாழ வழி வகுக்கும். நான் நல்லாத்தானே இருக்கேன், எனக்கு எதுக்கு பரிசோதனை என்று நினைக்கும் நண்பர்களுக்கான ஆராச்சி முடிவுகள் நல்ல செய்திகளை சொல்லவில்லை. 


வேலை பளு, சரியான தூக்கம் இல்லாதது, நேரத்திற்கு சாப்பிடமுடியாதது, புகை, மது, இன்ன பிற ஆரோக்கிய கேடு வஸ்துகள்... 'நீ மாட்டுவடா' என்று சர்க்கரை தோய்ந்த ரத்த அழுத்த கத்திகளுடன் காத்துக்கொண்டிருக்கின்றன. 


நல்லது என்று நஞ்சை உண்ணும் முன்பு இது பசிக்கா அல்லது ருசிக்கா என்று சுய பரிசோதனை செய்வது நலமென்பது என் கருத்து. நம்மை சார்ந்து நம் குடும்பம், பல குடும்பங்கள் ஒரு ஊர், பல ஊர்கள் சேர்த்து நாடுகள்... நம்மாலான உலகு... நாம் செய்யும் தவறுகள் நமது சந்ததியே பாதிக்கும் எனும்போது 'யாகாவாராயினும் நாகாக்க' என்பதை புது அர்த்தத்தில் இந்த புத்தாண்டில் புரிந்து கொள்வோம். இனிய ஆரோக்கியமான வளமையான சந்ததிகளுக்கான புத்தாண்டாக இந்த 2010 ஆரம்பிக்கட்டும்.


கடைசியாக :: எல்லோரும் ஆரோக்கியமாக இன்புற்றிருக்கவேயன்றி வேறொன்றும் வேண்டேன் பராபரமே..        


அனைவருக்கும் எனது மனம் கனிந்த 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள். 


பின் குறிப்பு ::
எனது மொக்கைகளுக்கும் (இப்படித்தான் பல பிரபல பதிவர்கள் போடறதுனால!!) ஆதரவு தந்து, பின்னூட்டமிட்டு, நட்பாய் தொடரும் நல் உள்ளங்களுக்கு என்னுடைய எல்லா பதிவுகளையும் சமர்ப்பிக்கிறேன். நன்றி..நன்றி..நன்றி.   


       






       
'


    






      
        


                        

23 comments:

Cable சங்கர் said...

டைட்டில் நலலாருக்கு

Ashok D said...

//டைட்டில் நலலாருக்கு//
இதுல ஏதாவது உள்குத்து உண்டோ??
ஏதோ என்னால முடிஞ்சது :)

Paleo God said...

D.R.Ashok said...
//டைட்டில் நலலாருக்கு//
இதுல ஏதாவது உள்குத்து உண்டோ??///

அய்யய்யோ நாக்க கட்டு படுத்தி நல்லதா சாப்டுங்கன்னு சொன்னா .. (ரூம் போட்டு யோசிப்பீங்களோ ...!!)
நா.. காக்கலன்னா உள்குத்துல ஆரம்பிச்சு .. வெளி குத்துல வந்து முடியும் (அட உடம்பு வலி, ஊசி போடறதுங்க ...ஸ்ஸ்ஸ் யப்பா இப்பவே கண்ண கட்டுதே ..) தமிழ் ரொம்ம்ம்ப நுணுக்கமான மொழி

ஏதோ என்னால முடிஞ்சது :)//

...அவ்வ்வ்வ் ..

sathishsangkavi.blogspot.com said...

சர்க்கரையைப்பற்றியான விவரங்கள் அறிந்தேன் இப்பதிவின் முலம்....

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

S.A. நவாஸுதீன் said...

///சிறிய அளவில் டாக்டருடைய கிளினிக்கில் தொடங்கப்பட்டு இன்றைக்கு ஒரு மண்டபத்தில் நடத்தக்கூடிய அளவிற்கு இந்த 10 ஆவது ஆண்டில் வளர்ச்சி கண்டிருக்கிறது.///

மிகவும் பாராட்டுக்குறியவர்கள். என்றென்றும் இவர்களின் சேவை தொடரட்டும்.

S.A. நவாஸுதீன் said...

////போன்றவைகள் செய்யப்பட்டன. மருத்துவ கேள்வி பதில் (QUIZ) போட்டியும் நடந்தது. சரியான பதில் சொல்லியவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. மேலும் 'உணவே மருந்து மருந்தே உணவு' என்ற தலைப்பில் ஒரு சிறிய பட்டிமன்றமும் நடந்தது. முதலில் நடக்கும் உணவிற்கு முன்பான ரத்த பரிசோதனைக்கு பிறகு முதலில் காபியும் பிறகு சுவையான சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. பட்டிமன்றம் QUIZ போன்றவை காலையிலிருந்து காத்திருந்து பரிசோதனை செய்ய வந்த வயதானவர்களுக்கு நல்லதொரு பொழுது போக்காக நிறைய அறிவுபூர்வமான் மருத்துவ விஷயங்கள் தெரிந்து கொள்ளக்கூடிய ஒன்றாக அமைந்தது. ////

படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பலா பட்டறை. இவர்களின் இந்த சேவையை எத்தனை பாராடினாலும் போதாது.

சீமான்கனி said...

நல்ல பகிர்வு நண்பரே...
நானும் நிறைய தெரிந்து கொண்டேன்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... பலா

Thenammai Lakshmanan said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

பலா பட்டறை நலமே பொலிக

நல்ல உபயோகமுள்ள பதிவு

Paleo God said...

Cable Sankar said...
டைட்டில் நலலாருக்கு//

வாங்க ஜி .. நன்றி.::)

Paleo God said...

Sangkavi said...
சர்க்கரையைப்பற்றியான விவரங்கள் அறிந்தேன் இப்பதிவின் முலம்...//

நன்றி சங்கவி :)) புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Paleo God said...

T.V.Radhakrishnan said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

நன்றி சார் .. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ..

Paleo God said...

S.A. நவாஸுதீன்

படிக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பலா பட்டறை. இவர்களின் இந்த சேவையை எத்தனை பாராடினாலும் போதாது. //

ஆமாம் நண்பரே.. நன்றி..!

Paleo God said...

seemangani said...
நல்ல பகிர்வு நண்பரே...
நானும் நிறைய தெரிந்து கொண்டேன்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்... பலா//

நன்றி கனி .. புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))

Paleo God said...

henammailakshmanan said...
புத்தாண்டு வாழ்த்துக்கள்

பலா பட்டறை நலமே பொலிக

நல்ல உபயோகமுள்ள பதிவு//

நன்றி சகோதரி .. முதல் வாழ்த்துக்கு .. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..:)

உண்மைத்தமிழன் said...

இதுக்குப் பேரு மொக்கையாண்ணே.. அனைவருக்கும் பயனுள்ள நல்லதொரு பதிவுங்கண்ணே..

பகிர்வுக்கு மிக்க நன்றி..!

Paleo God said...

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
இதுக்குப் பேரு மொக்கையாண்ணே.. அனைவருக்கும் பயனுள்ள நல்லதொரு பதிவுங்கண்ணே..

பகிர்வுக்கு மிக்க நன்றி..!//

வாங்கண்ணே... மிக்க நன்றி. புத்தாண்டு வாழ்த்துக்கள்..:))

ஷங்கி said...

புத்தாண்டு வாழ்த்துகள்!

Jerry Eshananda said...

பயனுள்ள பதிவு.

பூங்குன்றன்.வே said...

மிக்க நன்றி !!! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். நீங்களும்,உங்கள் குடும்பமும்,நட்பும் நீடுடி வாழ இயற்கையை வேண்டுகிறேன்.

Paleo God said...

நன்றி :: ஷங்கி.. ஆட்டமெல்லாம் முடிஞ்சுதா ..::)

நன்றி : ஜெரி ஈசானந்தா..

நன்றி : பூங்குன்றன் ..என்னாச்சு ஆளே காணோம்...:(

யூர்கன் க்ருகியர் said...

இது... பதிவு !

Paleo God said...

யூர்கன் க்ருகியர் said...
இது... பதிவு !//

நன்றி நண்பரே ..:)